ஆடிப்பெருக்கு 2025: ஆறு இல்லாத ஊர்களில் வசிப்பவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு

By Sakthi Raj Aug 03, 2025 04:43 AM GMT
Report

 ஆடி மாதத்தில் ஒரு முக்கியமான நாளாக ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்த வழிபாட்டை நீர் நிலைகளுக்கு சென்று நன்றி செலுத்தி விவசாயிகள் தங்கள் வாழ்வும் மண்ணும் செழிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் அற்புதமான நாளாகும். இந்த விழா காவிரி ஆறு ஓடும் கரைகளில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். 

அப்படியாக, இந்த ஆண்டு ஆகஸ்ட் 03ம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஆடிப்பெருக்கு விழாக்கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மக்கள் காவிரி ஆற்றங்கரைக்கு சென்று பூஜை செய்து வழிபாடு செய்வார்கள்.

மேலும், திருமணம் ஆன பெண்கள் காலையில் நல்ல நேரத்தில் தங்களின் தாலி கயிறை மாற்றிக் கொண்டு, தங்களின் குடும்பத்தின் ஆரோக்கியமும் கணவரின் ஆயுளும் பெருக வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

அதோடு, இந்த நாளில் ஆறுகளில் புனித நீராடுவது மிக சிறப்பாக கருதப்படுகிறது. இந்த வழிபாட்டை ஆற்றங்கரையில் வசிப்பவர்களுக்கு மிக எளிதாக சென்று வழிபாடு செய்யும் வாய்ப்புகள் கிடைத்து விடும். ஆனால், ஆறுகள் இல்லாத ஊர்களில் வசிப்பவர்கள் ஆடிப்பெருக்கு வழிபாட்டை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஆடிப்பெருக்கு 2025: ஆறு இல்லாத ஊர்களில் வசிப்பவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு | Aadi 18 Worship In Tamil 

ஆறுகளுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாதவர்கள் வீட்டில் இருந்தே வழிபாடு மேற்கொள்ளலாம். அதேப்போல், வீட்டில் உள்ள கிணறு, ஆழ்துளை கிணறு, தண்ணீர் பைப் ஆகியவற்றிற்கு சந்தனம், குங்குமம் தொட்டு வைத்து வழிபாடு செய்வது வீடுகளில் நீர்நிலைகள் எப்பொழுதும் நல்ல நிலையில் இருக்கும்.

இன்றைய ராசி பலன்(03-08-2025)

இன்றைய ராசி பலன்(03-08-2025)

அதோடு, வீட்டின் பூஜை அறையில் ஒரு சொம்பில் தண்ணீர் நிரப்பி, அதில் சிறிதளவு மஞ்சள், குங்குமம், கல் உப்பு, பச்சை கற்பூரம், ஏலக்காய் ஆகியவற்றை போட்டு காவிரி, கங்கை நதிகளும், குல தெய்வமும் அந்த நீரில் எழுந்தருள வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

ஆடிப்பெருக்கு 2025: ஆறு இல்லாத ஊர்களில் வசிப்பவர்கள் செய்ய வேண்டிய வழிபாடு | Aadi 18 Worship In Tamil

பிறகு பூஜை அறையில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து வெற்றிலை பாக்கு, பூ, பழங்கள், இனிப்பு போன்றவற்றை படைத்து வழிபாடு செய்ய வேண்டும். பச்சரிசியை இடித்து, வெல்லம் கலந்து துள்ளு மாவு கலந்து நைவேத்தியமாக படைக்கலாம்.

மேலும், வீடுகளில் அன்றைய நாளில் மங்களம் உண்டாக கல் உப்பு, மஞ்சள், குங்குமம், வளையல் போன்ற மங்கள பொருட்களை வாங்கி வைத்து செய்ய வேண்டும். வழிபாட்டை முடித்த பிறகு நாம் சொம்பில் வைத்த தண்ணீரை வீட்டில் உள்ளவர்கள் தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும்.

வழிபாட்டிற்கு வைத்த நெய்வேத்தியத்தை வீட்டில் உள்ளவர்களுக்கு பகிர்ந்து சாப்பிட வேண்டும். சுவாமிக்கு படைத்த மங்கள பொருட்களை வீட்டின் தேவைக்கு பயன் படுத்தலாம், அல்லது ஏதேனும் பெண்களுக்கு அதை தானமாக வழங்கலாம். இவ்வாறு வழிபாடு செய்யும் பொழுது நாம் ஆற்றங்கரைக்கு சென்று வழிபட்ட முழு பலன் கிடைக்கும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US