இன்று ஆடி அமாவாசை.., முன்னோர்களுக்கு விரதம் மேற்கொள்வது எப்படி?
இந்து பண்டிகையில் அமாவாசை நாள் முக்கிய நாளாக கருதப்படுகிறது.
மேலும், தானம் செய்வதற்கும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஆடி மாதம் வரும் அமாவாசை மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது.
அந்தவகையில், இந்த வருடம் ஆடி அமாவாசை இன்று (24.07.2025 ) வியாழக்கிழமை நடக்கிறது.
இந்நாளில் முன்னோர்களுக்கு விரதம் மேற்காள்வது எப்படி என்று பார்க்கலாம்.
எப்படி விரதம் இருப்பது?
ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எதுவும் சாப்பிடாமல் இருந்து உணவுகளை சமைக்க வேண்டும்.
பின் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ, அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவுகள், பதார்த்தங்கள் , துணிகள் வைத்து விளக்கேற்றி முன்னோர்களை வணங்க வேண்டும்.
பிறகு, படைத்த உணவு, பதார்த்தங்களையும் தனித்தனியாக இலையோடு எடுத்து காக்கை உண்ண வேண்டும் என்பதால்தான் உயரமான இடங்களில் வைக்க வேண்டும்.
காக்கைகள் உண்ட பிறகு, வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவு முறைகளுக்கேற்ப உள்ளவர்கள் அமர்ந்து சாப்பிட வேண்டும்.
அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக் கூடாது பகலில் சாப்பிடலாம். இரவில் பால், பழம் அல்லது சிற்றுண்டிகள் ஏதாவது சாப்பிடலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







