100 சேவல்கள் சமைத்து அன்னதானம்.., ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஆடி படையல் திருவிழா

By Yashini Jul 20, 2026 12:26 PM GMT
Report

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் மழை வேண்டி வினோத திருவிழா நடைபெறுகிறது.

இந்த விழாவில் ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடுவது வழக்கம்.

அதன்படி, இந்தாண்டுக்கான ஆடி படையல் திருவிழா நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இதையொட்டி, பக்தர்கள் மதுரைவீரன் சுவாமிக்கு 100க்கும் மேற்பட்ட சேவல்களை பலியிட்டு வழிபட்டனர்.

100 சேவல்கள் சமைத்து அன்னதானம்.., ஆண்கள் மட்டும் பங்கேற்ற ஆடி படையல் திருவிழா | Aadi Badayal Festival Where Only Men Participated

தொடர்ந்து, பலியிடப்பட்ட சேவல்கள் பெரிய பாத்திரங்களில் ஆண்கள் மட்டுமே சமைத்தனர்.

பின்னர், பக்தர்களுக்கு வாழை இலையில் உணவு பரிமாறப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

பெண்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு புறப்பட்டதை தொடர்ந்து, அன்னதானத்தில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு சாப்பிட்டனர்.

இந்த வழிபாட்டை நடத்தினால் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US