2026: செவ்வாய் பெயர்ச்சி.. செப்டம்பர் 18 முதல் இந்த 3 ராசிகள் கவனமாக இருக்க வேண்டுமாம்

By Sakthi Raj Sep 13, 2026 11:50 AM GMT
Report

நவகிரகங்களில் செவ்வாய் பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக பார்க்கப்படுகிறார். இவர் தான் ஒருவருடைய தைரியம், துணிச்சல், வீரம், வலிமை ஆகியவற்றுக்கு காரணியாக இருப்பவர். மேலும், செவ்வாய் பகவான் ஒரு ராசியில் ஒன்றரை மாதம் இருப்பார்.

அவர் தற்பொழுது மிதுன ராசியில் பயணித்து வருகிறார். செப்டம்பர் 18ஆம் தேதி அன்று சந்திரனுடைய கடக ராசிக்கு செல்கிறார்.

இந்த ராசியில் நவம்பர் 12ஆம் தேதி வரை இருக்க உள்ளார். கடக ராசி செவ்வாய் பகவான் நீசம் அடையக்கூடிய ராசி என்பதால் ஒரு சில ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது. அவர்களை பற்றி பார்ப்போம்.

2026: செவ்வாய் பெயர்ச்சி.. செப்டம்பர் 18 முதல் இந்த 3 ராசிகள் கவனமாக இருக்க வேண்டுமாம் | 3 Zodiac Must Be Carefull On Sept 18 Mars Transit

மேஷம் முதல் மீனம் வரை.. யாருக்கு காதலில் வெற்றி கிடைக்கும்..

மேஷம் முதல் மீனம் வரை.. யாருக்கு காதலில் வெற்றி கிடைக்கும்..

கடகம்:

கடக ராசியில் இந்த செவ்வாய் பெயர்ச்சியானது இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் செயல்பாடுகளில் கூடுதல் கவனத்தை செலுத்துவது நல்லது. வேலை செய்யும் இடங்களில் எதிரிகளால் சில இடையூறுகளை சந்திக்கலாம்.

இதனால் மன அழுத்த அதிகரிக்கப்படும். ஆரோக்கிய விஷயங்களை மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அவசர முடிவுகளை தவிர்க்கலாம்.

துலாம்:

துலாம் ராசிக்கு பத்தாம் வீட்டில் செவ்வாய் பயணிக்க இருக்கிறார். இதனால் இவர்களுக்கு தொழில் மற்றும் வேலை செய்யும் இடங்களில் சில சவால்களை சந்திக்கக்கூடும். பணியை குறிப்பிட்ட சில நேரங்களில் முடிப்பதற்கு சில சிரமங்களை சந்திக்கலாம்.

எந்த ஒரு முடிவையும் அவசரமாக எடுக்காதீர்கள். குடும்ப வாழ்க்கையிலும் சில கருத்து வேறுபாடுகள் வரலாம் என்பதால் அமைதியாக செயல்படுவது அவசியம்.

2026: விநாயகர் சதுர்த்தி அன்று பாட வேண்டிய 108 போற்றி மந்திரங்கள்

2026: விநாயகர் சதுர்த்தி அன்று பாட வேண்டிய 108 போற்றி மந்திரங்கள்

மகரம்:

மகர ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். இதனால் இவர்களுக்கு இந்த காலகட்டம் கூடுதல் சவாலாகவே இருக்கப்போகிறது. வாழ்க்கை துணை உடன் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க வேண்டும்.

கோபத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதும் மற்றவர்களிடம் தேவையில்லாத வாக்குவாதம் செய்வதையும் மோதலில் ஈடுபடுவதையும் குறைப்பது நல்லது. சிலர் சட்ட ரீதியான பிரச்சினைகளை சந்திக்கலாம்.   

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US