12 ராசிகளும் இந்த ஒரு தவறை செய்தால் பெரிய அளவில் மாட்டிக்கொள்வார்களாம்
12 ராசிகளுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. அந்த வகையில், அவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எவ்வாறு நல்ல விஷயம் செய்தால் அவர்கள் முன்னேற்றம் வருகிறதோ, அதேபோல் அவர்கள் இந்த ஒரு விஷயத்தை செய்யும் பொழுது மிகப்பெரிய அளவில் தடையும் வருகிறது. அந்த வகையில், 12 ராசிகளில் எந்த தவறை கண்டிப்பா அவர்கள் செய்தால் நிச்சயம் வாழ்க்கையில் தோற்று விடுவார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
இவர்கள் எப்பொழுதும் நான் சொல்வது தான் சரி என்று ஆதிக்கம் செலுத்தினால் ஒருவருடைய அன்பை நிச்சயம் இழப்பார்கள்.
ரிஷபம்:
இவர்கள் தங்களுடைய தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அடுத்த நொடி அவர்களுடைய உறவு முடிந்து விடும்.
மிதுனம்:
இவர்கள் குடும்பத்தினரை அலட்சியம் செய்தால் குடும்பத்தில் விரிசல் உண்டாகும்.
கடகம்:
இவர்கள் ஒருவரை சந்தேக கண்களோடு பார்த்தால் நிச்சியமாக நிம்மதியை முழுமையாக இழந்து விடுவார்கள்.
சிம்மம்:
இவர்களின் ஈகோவை கைவிடவில்லை என்றால் தனித்து விடப்படுவார்கள்.
கன்னி:
இவர்கள் ஒருவரிடம் துருவி துருவி கேள்வி கேட்க தொடங்கி விட்டால் உங்களை தூக்கி எறிந்து விடுவார்கள்.

துலாம்:
ஒரு இடத்தில் இருக்கக்கூடிய பிரச்சனையை பெரிதாக பார்த்தால் நல்ல வாய்ப்புகளை இழக்கக்கூடும்.
விருச்சிகம்:
குடும்பத்தினரோடு ஒன்றாக இணைந்து வாழவில்லை என்றால் வாழ்க்கை நரகமாகிவிடும்.
தனுசு:
குடும்ப பொறுப்புகளை தட்டிக் கழித்துக் கொண்டே போனால் யாருமே கூட இருக்க மாட்டார்கள்.
மகரம்:
உங்களுக்காக வாழ்கின்ற குடும்பத்தினரை நிராகித்து செல்லும் பொழுது பெரிய தூரம் ஏற்படுகிறது.
கும்பம்:
போலியாக நடிக்கின்ற பொழுது வாழ்க்கையும் போலியாக மாறிவிடுகிறது.
மீனம்:
ஒருவரை எப்பொழுதும் குத்தி காண்பித்து பேசிக் கொண்டே இருக்கின்ற பொழுது யாரும் உங்களிடம் உண்மையாகவே இருக்க மாட்டார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |