ஏழு தலைமுறை பாவம் போக்கும் புண்ணிய விரதம்
கடவுளை நினைத்து செய்யும் காரியம் அனைத்துமே நன்மைகளை தரும்.அப்படியாக நாம் அனைவரும் ஏகாதசி விரதம் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.அந்த விரதம் மேற்கொள்வதால் எந்த பிறவியில் என்ன பாவங்கள் செய்து இருந்தாலும் அதில் இருந்து பாவங்கள் நீங்கி வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
அப்படியாக ஆடி மாதத்தில் வரும் ஏகாதசி மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகும். இந்த ஏகாதசிக்கு பல சிறப்புகள் இருக்கிறது.
அதாவது ஆடி மாதத்தில் வரும் காமிகா ஏகாதசியில் விரதம் இருப்பவர்களின் பாவம் மட்டுமின்றி, அவரின் ஏழு தலைமுறைகளை சேர்ந்தவர்களின் பாவங்களும் நீங்கி, முன்னோர்களுக்கும் சேர்த்து மோட்சம் கிடைக்க வழி வகை செய்யும் என சொல்லப்படுகிறது. இப்பொழுது காமிகா ஏகாதசி விரதம் மேற்கொள்ளும் முறை பற்றி பார்ப்போம்.
காமிகா ஏகாதசியின் சிறப்பு
அதாவது எந்த ஆண்டும் போல் இல்லாமல் இந்த ஆண்டு ஆடி மாதம் மூன்று ஏகாதசிகள் வருகின்றன. ஆடி மாத தேய்பிறையில் வரும் ஏகாதசிக்கு காமிகா ஏகாதசி என்ற பெயர்.இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவார்கள் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு காமிகா ஏகாதசி ஜூலை 31ம் தேதி புதன்கிழமை வருகிறது. ஜூலை 30ம் தேதி இரவு 07.31 மணிக்கு துவங்கி, ஜூலை 31ம் தேதி மாலை 06.10 வரை ஏகாதசி திதி உள்ளது.
அது மட்டுமல்ல கிருஷ்ணர் அவதரித்த நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரத்துடன் இணைந்து இந்த ஏகாதசி வருவதால், இது கூடுதல் சிறப்புடையதாக கருதப்படுகிறது.
ஜூலை 30 ம் தேதி பகல் 01.41 மணி துவங்கி, ஜூலை 31ம் தேதி பகல் 01.01 வரை ரோகிணி நட்சத்திரம் உள்ளது. பாரணை செய்யும் நேரமாக ஆகஸ்ட் 01ம் தேதி காலை 04.30 முதல் 05.15 மணி வரையிலான நேரம் சொல்லப்பட்டுள்ளது
அதாவது ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் காமிகா ஏகாதசி விரதம் இருப்பதால் பல புண்ணிய நதிகளில் நீராடிய பலனும், அஸ்வமேத யாகம் செய்த பலனும், பசு தானம் வழங்கிய பலனும், யாகங்கள் போன்ற புண்ணிய ஆன்மிக சடங்குகள் நடத்திய பலனும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
காமிகா ஏகாதசி விரதத்தை பக்தியுடன் கடைபிடிப்பதும், அன்றைய தினம் விஷ்ணு வழிபாட்டினை செய்வதாலும் அளவில்லாத புண்ணிய பலன்கள் விரதம் இருப்பவருக்கு மட்டுமின்றி, அவரது பல தலைமுறையினருக்கும் கிடைக்கிறது.
இந்த விரதம் இருப்பவர்களின் பாவங்கள், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, பெருமாளின் திருவருளால் அவர்கள் வேண்டிய அனைத்தும் கிடைக்கும்.
மேலும் இந்த விரதம் இருப்பதால் அவர்களுடைய முன்னோர்கள் மன மகிழ்ச்சி அடைந்து அவர்கள் தலைமுறையாக பாதிக்கும் துன்பங்கள் பாவங்களுக்கு மோட்சம் கிடைக்கிறது என்பது நம்பிக்கை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |