ஆடி மாதமும் மஞ்சளின் மகிமையும்
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்குரிய மாதம்.அந்த மாதத்தில் அம்மனை நினைத்து விரதம் இருந்து வழிபட அனைத்து பாக்கியமும் கிடைக்கும்.
அப்படியாக ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அதிகாலையில் எழுந்து மஞ்சள் தேய்த்து குளித்து மாரி அம்மனை வழிபட அம்மன் எல்லா நலமும் தருவார் என்பது ஐதீகம்.
அதுமட்டும் அல்லாமல் ஏழை எளிய பெண்களுக்கு மஞ்சளை தானமாக கொடுப்பதால் நன்மை உண்டாகும் என்ற பழக்கத்தையும் வைத்திருக்கின்றனர்.
இருந்தாலும் அந்த காலம் போல் இல்லாமல் இன்று கிராமங்களில் கூட பெண்கள் ஆடி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சள் தேய்த்து நீராடுவது குறைந்து விட்டார்கள்.
இது கால மாற்றம் என்றே சொல்லலாம்.
நம் முன்னோர்கள் சொல்லியபடி அரைத்த மஞ்சளை பூசி குளித்தால் நமக்கு வரும் பல வியாதிகளில் இருந்து நம்மை காப்ற்றமுடியும் என்றும்,அம்மனின் அருளை பெறலாம் என்பது உண்மை.
ஆக எல்லா நாளும் முடியாவிட்டாலும் ஆடி மாதத்தில் அம்மன் நினைத்து மஞ்சள் தேய்த்து குளிக்க நம் உடல் ஆரோக்கியம் மட்டும் அல்லாமல் இறை அருளையும் கிடைக்கபெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |