ஆடி 2025: இந்த மாதம் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது
தமிழ் மாதம் 12 மாதங்களில் ஆடி மாதம் மிகவும் முக்கியமான மற்றும் விஷேசம் நிறைந்த மாதம் ஆகும். இந்த மாதம் அம்மன் வழிபாட்டிற்கும், குலதெய்வ வழிபாட்டிற்கும் உரிய மிக சிறந்த மாதம் ஆகும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆடி மாதத்தில் நாம் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது என்று பார்ப்போம்.
ஆடி மாதத்தில் என்ன செய்யலாம்:
ஆடி மாதத்தில் திருமணம் ஆன புதுமணப்பெண் தாலி பிரித்து கோர்க்கலாம். அதேப்போல், நீண்ட நாட்களாக குடும்பத்தில் ஏதெனும் நேர்த்திக்கடன் இருந்தால் அதை ஆடி மாதத்தில் செய்யலாம். ஆடிப்பெருக்கு அன்று புது வீடு வாங்க அல்லது நிலம் வாங்க முன்பணம் கொடுக்கலாம்.
இம்மாதம் அம்மனுக்கு மிகசிறந்த மாதம் என்பதால் கோயில்களில் அம்மனுக்கு குங்குமம் அர்ச்சனை கொடுக்கலாம். மேலும், இம்மாதம் பெண் தெய்வங்களுக்கு உரிய மாதம் என்பதால் இந்த மாதத்தில் ஆடி வெள்ளிக்கிழமையில் பிறக்கும் பெண் குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் என்ன செய்யக்கூடாது:
ஆடி மாதத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்தல் கூடாது. அதேப்போல் குழந்தைகளுக்கு மொட்டை அடித்தல் கூடாது. திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளை செய்தல் கூடாது.
இந்த மாதத்தில் புதிய வீடு மாறுதல், வீடு கிரகப்பிரவேசம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதேப்போல் இந்த மாதத்தில் திருமணத்திற்கு பெண் பார்க்க செல்வதை தவிர்க்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |