ஆடி மாதத்தில் நாம் தவறாமல் செய்யவேண்டிய 10 வழிபாடுகள்

By Sakthi Raj Jul 17, 2025 07:07 AM GMT
Report

தமிழ் மாதங்களில் மிகவும் விஷேசம் நிறைந்த மற்றும் சிறப்பு வாய்ந்த மாதமாக ஆடி மாதம் இருக்கிறது. இந்த மாதம் முழுவதும் அம்மன் வழிபாட்டிற்கு உரிய சிறப்பு வாய்ந்த மாதம் ஆகும். மேலும், இந்த ஆடி மாதத்தை பெண் மாதம் என்றும் கற்கடக மாதம் என்றும் சொல்லுவார்கள்.

அதோடு, ஆடி மாதம் முதல் மார்கழி வரை தட்சணாயன புண்ணிய காலம் என்று அழைக்கப்படும். இந்த காலங்களில் நாம் புனித நீர்களில் நீராடுவது நமக்கு மிக சிறந்த புண்ணியம் கிடைப்பதோடு, நம்முடைய பாவங்களையும் போக்குகிறது.

பொதுவாக இந்த ஆடி மாதத்தில் சிவபெருமானுடைய சக்தியை காட்டிலும் அன்னை பார்வதி தேவியின் சக்தி அதிக அளவில் இருக்கும். அப்படியாக, இந்த ஆடி மாதத்தில் இன்னும் எத்தனை சிறப்புகள் நிறைந்து இருக்கிறது என்று பார்ப்போம்.

ஆடி மாதத்தில் நாம் தவறாமல் செய்யவேண்டிய 10 வழிபாடுகள் | Aadi Month Worship In Tamil

1. எவர் ஒருவர் ஆடி மாதத்தில் வரும் ஆடி அமாவாசை அன்று மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் கடமைகளை செய்கிறார்களோ அவர்களுக்கு அந்த ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த முழு பலன் பெறுகிறார்கள்.

2. தவமாக தவம் இருந்து அரங்கனை மணந்த ஆண்டாள் பிறந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருளச் செய்வார்கள். அப்பொழுது, திருப்பாவை, பாசுரங்கள் எல்லாம் பாடப்படும். அந்த வேளையில் நாம் ஆண்டாள் அம்மாவை வாழிபாடு செய்தால் நம்முடைய பிரார்த்தனைகள் மற்றும் நம்முடைய குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்.

3. நீண்ட நாட்களாக திருமண தடை சந்திப்பவர்கள் ஆடி மாதம் வரக்கூடிய செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காமாட்சி அம்மனை மனதார வழிபட்டு வந்தால் திருமண தடைகள் விலகி விரைவில் திருமணம் நடக்கும்.

4. தீராத கண் திருஷ்டி விலக ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருகி வழிபாடு செய்தால் அம்மன் அருளால் நம்மை சூழ்ந்த எதிர்மறை ஆற்றல்கள் விலகும்.

5. குடும்பத்தில் செல்வம் பெருகவும், கடன் சுமை குறையவும் ஆடி மாதம் சுக்ல பட்சதுவாதசி அன்று மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

இந்த 3 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் ஈகோ அதிகமாம்- யார் யார் தெரியுமா?

இந்த 3 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் ஈகோ அதிகமாம்- யார் யார் தெரியுமா?

6. ஆடி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிபட்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

7. ஆடி மாதம் முழுவதும் பெண்கள் லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

8. ஆடி மாதத்தில் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் நீங்காத செல்வமும் கிடைக்கும்.

9. குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க ஆடி மாதம் பௌர்ணமி தினத்தில் ஹயக்ரீவர் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைப்பெறும். அதாவது, ஹயக்ரீவர் அவதாரம் நடந்தது ஆடி மாதத்தில்தான். அதனால் அன்றைய தினம் மாணவர்கள் வியாசரை வணங்கினால் கல்வி வளம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.

10. ஆடி மாதம் 18 ஆம் நாளை ஆடிப்பெருக்கு விழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் தம்பதிகள் ஆற்றங்கரையில் நீன்று தங்களின் தாலியை புதிதாக மாற்றிக் கொள்வார்கள். இது அவர்களுக்கு இடையே நல்ல இணக்கத்தையும் நல்வாழ்வையும் கொடுக்கிறது.      

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US