இந்த 3 ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் ஈகோ அதிகமாம்- யார் யார் தெரியுமா?
மனிதர்களிடம் நாம் பல்வேறு குணங்களை பார்க்க முடியும். அதில் இந்த ஒரு குணம் இருந்தால் அவர்கள் யாரிடமும் அவ்வளவு நட்பு பாராட்ட முடியாது. அவர்களின் ஈகோ பெரும் அளவில் அவர்களை எதையும் செய்யவிடாமல் தடுக்கும். அப்படியாக, ஜோதிடத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிக அளவிலான ஈகோ இருக்கும் என்று பார்ப்போம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் மிகுந்த ஆளுமை திறன் கொண்டவர்கள். அதேப்போல் இவர்களுக்கு தான் என்ற எண்ணம் அதிக அளவில் இருக்கும். அதனால், இவர்களைப் பற்றி ஏதேனும் நல்ல விமர்சனம் சொன்னால் கூட அதை அவர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இவர்கள் ஈகோ இல்லாமல் வாழவேண்டும் என்று நினைத்தாலும் அவர்களின் ராசியின் தன்மை அவர்களை அவ்வாறு இருக்க விடுவதில்லை.
மேஷம்:
மேஷ ராசிக்காரர்கள் எல்லோரிடத்திலும் அன்பாக பழகக் கூடியவர்கள். இவர்களை சுற்றி உள்ள நபர்கள் இவர்களுக்கு அதிக அளவில் மரியாதையும், அன்பும் செலுத்த வேண்டும் என்று நினைப்பார்கள். இவர்களுக்கு கொடுக்கவேண்டிய முன்னுரிமையை யாரேனும் கொடுக்க தவறி விட்டால் அவர்களின் ஈகோ பெரும் அளவில் பாதிக்கப்படும். அதேப்போல் இவர்களை சுற்றி உள்ளவர்கள் இவர்களின் சொல் பேச்சு கேட்டு நடக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
விருச்சிகம்:
12 ராசிகளில் அதிக அளவில் ஈகோ கொண்டவர்கள் என்றால் விருட்சிக ராசிக்காரர்கள் தான். இவர்களிடம் எப்பொழுதும் "தான்" என்ற எண்ணம் அதிக அளவில் காணப்படும். இவர்களின் "தான்" என்ற எண்ணமே இவர்களுக்கு பல இடங்களில் தடுமாற்றத்தை கொடுத்து விடுகிறது. இவர்களிடம் பேசும் பொழுது மிக கவனமாக பேச வேண்டும். நாம் பேசும் வார்த்தைகளில் ஏதேனும் சிறிய தவறு இருந்தால் கூட அவர்கள் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்வார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |