சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்த ராஜநாகம்- வியப்பூட்டும் அதிசியம்
நம்முடைய இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலும் ஒன்று. இங்கு பக்தர்கள் பலரும் மாலை அணிந்து சுவாமியை தரிசனம் செய்ய வருவார்கள். மேலும், ஐயப்பனுக்கு விரதம் இருந்து மாலை அணிந்து மலைக்கு செல்வது என்பது சாதாரண விஷயம் அல்ல.
அதற்கு ஐயப்பனின் முழு அருளும் நமக்கு தேவை. அப்படியாக, பலருக்கும் இஷ்ட தெய்வமாக இருந்து வழி நடத்துபவர் ஐயப்பன். அந்த வரிசையில் மனிதர்களை போல் பத்து அடி நீள ராஜநாகம் ஒன்றும் ஐயப்பனை தரிசனம் செய்ய வந்த விஷயம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.
நேற்று(16-07-2025) அதிகாலை காட்டுக்குள் இருந்து வந்த ராஜநாகம் நேராக சபரிபீடம் நோக்கி சென்றது. பிறகு, அந்த ராஜநாகம் சபரிமலை 18 ம் படி அருகே தேங்காய் உடைக்கும் இடத்தில் அமைதியாக இருந்தபடி சுவாமியை வேண்டி நின்று பின்பு தலையை கீழே பதித்து சரணடைந்தது.
வழிபாட்டை முடித்து சிறிது நேரம் கழித்து அந்த நாகம் அங்கு இருந்து கிளம்பியது. வனத்துறையினர் ராஜநாகத்தை வணங்கியப் படி அதன் போக்கிலே விட்டு பின்பு அது சபரிமலை பீடத்தை கடந்ததும் அதைப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டு சென்றனர்.
இந்த காட்சியை பார்த்த செய்த பலரும் மெய்சிலித்தனர். பக்தர்கள் பக்தியில் சுவாமி சரணம், ஐயப்ப சரணம் என்று கோஷம் எழுப்பியது பலரையும் கண் கலங்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







