நாளைய ராசி பலன்(18-07-2025)

Report

மேஷம்:

இன்று சிலருக்கு வியாபாரத்தில் சில சட்ட சிக்கல் சந்திக்க நேரலாம். சகோதரன் வழி உறவால் சில சங்கடங்களை சந்திக்கலாம். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். செலவுகளில் சிக்கனம் தேவை.

ரிஷபம்:

இன்று உங்களுக்கு மூன்றாம் நபரால் சில தொந்தரவுகள் வரலாம். வெளியூர் பயணம் நல்ல முடிவை தரும். உறவுகளுக்கு இடையே ஏற்பட்ட விரிசல் விலகும். குலதெய்வ வழிபாடு நன்மை அளிக்கும்.

மிதுனம்:

இன்று மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பெற்றோர்கள் குழந்தைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். வேலையில் சந்தித்த சிக்கல்கள் விலகி செல்லும்.

கடகம்:

மதியம் வரை மனதில் சில குழப்பங்களும் பதட்டமும் உண்டாகும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இன்று முடிந்த வரை உங்கள் கோபத்தை குறைத்து கொள்வது நல்லது.

சிம்மம்:

இன்று பெற்றோர்கள் உங்களுக்கு முழு ஆதரவையும் கொடுப்பார்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட வாய்ப்புகள் உள்ளது. இறை வழிபாடு மட்டுமே துணை நிற்கும்.

கன்னி:

உங்கள் கருத்துக்களை இன்று முடிந்த வரை சொல்லாமல் இருப்பது நல்லது.  முடிந்து வரையில் மன அமைதியுடன் இருப்பது நன்மை தரும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

துலாம்:

மனதில் இறைச்சிந்தனை அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். திருமண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனை விலகும். நன்மையான நாள்.

இந்த ஒரு விஷயம் தெரிந்துக்கொண்டால் மனிதன் எதையும் சாதிக்கலாம்

இந்த ஒரு விஷயம் தெரிந்துக்கொண்டால் மனிதன் எதையும் சாதிக்கலாம்

விருச்சிகம்:

இன்று உங்களின் சொந்த விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். பணத்தை சேமிப்பதை பற்றி திட்டம் போடுவீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

தனுசு:

இன்று உங்கள் உடல் நிலையில் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கையின் முக்கிய முடிவை எடுக்கும் நாள். கணவன் வழி உறவால் முழு ஆதரவும் கிடைக்கும். அமைதியான நாள்.

மகரம்:

எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நல்ல வெற்றியைப் பெரும். உங்கள் வெற்றிகளை கொண்டாடும் நாள். படிப்பில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். திறமை வெளிப்படும் நாள்.

கும்பம்:

பணிபுரியும் இடத்தில் கவனமாக செயல்படுவது நல்லது. பிறரிடம் கோபத்தை வெளிப்படுத்த வேண்டாம். வார்த்தைகளில் நிதானம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மீனம்:

இன்று மனதை இறைவழிபாட்டில் செலுத்துவீர்கள். வாழ்க்கையில் வளர்ச்சி காணும் நாள். பிள்ளைகளை புரிந்து நடந்து கொள்வீர்கள். வழக்குகளில் வெற்றி காணும் நாள்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US