இந்த ஒரு விஷயம் தெரிந்துக்கொண்டால் மனிதன் எதையும் சாதிக்கலாம்
மனிதர்கள் நாம் பலரும் நம் பலம் அறியாமல் பல விஷயங்களை தவற விடுகின்றோம். இதற்கு நம்முடைய அறியாமையும் ஒரு காரணம். அப்படியாக, நாம் எவ்வாறு நம்முடைய பலம் அறிவது என்று ஒரு சின்ன கதை வழியாக பார்க்கலாம்.
ஒரு ஊரில் பாகன் ஒரு குட்டி யானையை எடுத்து வளர்த்து வந்தான். சில வருடங்கள் கடந்தன, யானையின் கால்களை சங்கிலியால் கட்டத் தொடங்கினான். அன்று முதல் அந்த யானை அவரின் பாகன் அதன் சங்கலியை கழட்டும் வரை எங்கேயும் நகராது. அப்படியாக, ஒரு நாள் யானையை கட்டப்பட்ட இடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
அந்த வேளை பார்த்து யானையின் பாகன் அந்த இடத்தில் இல்லை. யானையும் அசைவுற்று இருந்தது. அதனால், அந்த தீ விபத்தில் யானை இறக்க நேரிட்டது. உண்மையாகவே, யானை நினைத்து இருந்தால் அதனுடைய பலத்தை பயன்படுத்தி அந்த சங்கலியை உடைத்து எரிந்து நகர்ந்து இருக்கலாம்.
ஆனால், யானையால் அதை செய்ய முடியவில்லை. காரணம், அந்த யானை அதனுடைய பலம் அறியாமல், அந்த சங்கிலியை நம்மால் உடைக்க முடியாது, அவரின் பாகன் வந்தாலே உடைக்க முடியும் என்று நம்பிக்கொண்டு இருந்தது.
மனிதர்களும் நாமும் சில நேரங்களில் அந்த யானையைப் போல் தான் நம்முடைய பலத்தை நாம் உணராமல் அறியாமையில் இருக்கின்றோம். எளிதாக உலகத்தின் மாய வலையில் சிக்கிக்கொண்டு தவிக்கின்றோம்.
அந்த யானைக்கு கண்ணன் பலத்தை கொடுத்து இருந்தும், அதனால் அதை உணர முடியாமல் தீயில் மாண்டு போனது. நாமும் இவ்வாறு தான் கண்ணன் கொடுத்த பலத்தை அறியாமல் கண்களை மூடிக்கொண்டு என்னால் இது முடியாது, சாத்தியமற்றது என்று முடிவு செய்து முயற்சி செய்யாமல் வாழ்ந்து வருகின்றோம்.
நம்முடைய மாயை அகல "சரணாகதி" அடைய வேண்டும். இறைவனை நெருங்க நெருங்க நம்முடைய மாயை என்னும் சங்கிலி நம்மை விட்டு அகலும், மனதிற்கு விடுதலை கிடைக்கும். உலகத்தின் உண்மை நிலை புரிய வரும். மீண்டும் ஒரு புதிய பிறப்பு எடுப்போம்.
ஆதலால், மனிதர்கள் நாம் இறைவனையும் நம்முடைய நம்பிக்கை தாண்டி எந்த ஒரு விஷயத்தையும் பெரிதாக நினைத்து கண்களை மூடிக்கொண்டு வாழந்து மாண்டு போகக்கூடாது.
சர்வம் கிருஷ்ணார்பணம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







