நாளைய ராசி பலன் (07-02-2026)
மேஷம்:
காலை முதல் மனம் சற்று பதட்டமாக காணப்படும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். தந்தை வழி சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகும்.
ரிஷபம்:
கணவன் உங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருப்பார். மனதில் இருந்து கவலைகள் விலகும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும். நட்புகளிடம் சற்று கவனமாக பேசுங்கள்.
மிதுனம்:
வழக்கு தொடர்பான விஷயங்களில் நீங்கள் மிகவும் கவனம் இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் வரலாம். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். குழப்பம் நிறைந்த நாள்.
கடகம்:
வெளியூருக்கு செல்லும் பொழுது உணவு விஷயங்களில் கவனமாக இருங்கள். குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு நடப்பீர்கள். குலதெய்வ வழிபாடு உங்களுக்கு நன்மை உண்டு செய்யும்.
சிம்மம்:
தொழில் ரீதியாக சில குழப்பங்களை சந்திப்பீர்கள். வருமானத்தில் இருந்து வந்த சிக்கல் விலகும். அரசியலில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். மாலை மேல் உடல் நிலையில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி:
பொழுதுபோக்கு விஷயங்களில் இன்று நிறைய ஆர்வம் செலுத்துவீர்கள். உங்களுக்கு பிடித்த உணவுகளை வாங்கி மகிழ்வீர்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் கவனமாக பேச வேண்டும்.
துலாம்:
எதிர்பாராத முக்கிய நபரின் சந்திப்புகளை பெறுவீர்கள். வழக்கு விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். உடன் பிறந்தவர்களால் இருந்து வந்த கசப்புகள் விலகும். நண்பர்கள் ஆறுதல் ஆக இருப்பார்கள்.
விருச்சிகம்:
உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் இன்னும் அதிக அளவில் நெருக்கடிகள் கொடுக்கலாம். அமைதி காக்க வேண்டும்.
தனுசு:
மனதில் நம்பிக்கையும் எதிர்காலம் பற்றிய பயமும் விலகும். துணிந்து ஒரு சில விஷயங்களை செய்வீர்கள். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான நேரம் செலவிடுவீர்கள்.
மகரம்:
காலை முதல் மனம் சரியான முடிவு எடுக்க முடியாமல் குழப்பத்திற்கு ஆளாகலாம். சுற்றி உள்ளவர்கள் பற்றி புரிந்து கொள்வீர்கள். உங்கள் மீது இருந்த கோபமும் வருத்தமும் விலகும். உங்களை நீங்கள் நேசிக்கும் நாள்.
கும்பம்:
வியாபாரத்தை விரிவு படுத்துவதை பற்றி யோசிப்பீர்கள். மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வீட்டிற்கு விருந்தினர்களின் வருகையால் நன்மை உண்டாகும்.
மீனம்:
சொந்தங்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நடக்கக்கூடிய நாள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உங்களைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்வீர்கள். முக்கியமான நபரிடம் இருந்து பரிசை பெறுவீர்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |