இந்த 3 ராசிகளிடம் யார் மோதினாலும் ஜெயிக்கவே முடியாதாம்
ஒரு சில மனிதர்கள் அவர்கள் மிகுந்த வலிமையோடு இருப்பார்கள். படிப்பு திறமை என்று எல்லாவற்றிலும் சிறந்து விளங்குவார்கள். அவர்களிடம் போட்டி போட்டால் யாராலும் ஜெயிக்க முடியாது.
காரணம் அந்த அளவிற்கு அவர்களின் திறமையை வளர்த்து கொண்டே இருப்பார்கள். அதற்கு அவர்களின் ராசி அமைப்பும் காரணமாக இருக்கிறது. அந்த வகையில் எந்த ராசியினரை யாரும் நெருங்க முடியாத அளவிற்கு மிகுந்த திறமையோடு இருப்பார்கள் என்று பார்ப்போம்.

மேஷம்:
மேஷ ராசியினர் அதிபதி செவ்வாய் பகவான். இவர்கள் பொதுவாகவே வலிமை மிகுந்தவர்களாக இருப்பார்கள். அதோடு எதற்கும் அஞ்ச மாட்டார்கள். எந்த ஒரு போட்டி என்றாலும் இவர்கள் அங்கு முதன்மை வகிப்பவராக இருப்பார்கள். அதே போல் ஏதேனும் சவால் என்று வந்து விட்டால் அதில் இவர்கள் ஜெயிக்காமல் விடமாட்டார்கள்.
சிம்மம்:
சிம்ம ராசியின் அதிபதி சூரியன் பகவான். இவர்களிடம் தலைமைத்துவ பண்புகள் இயல்பாகவே நிறைந்து இருக்கும். ஆதலால் வாழ்க்கையை மிகுந்த சவாலோடு வாழ்வார்கள். மேலும், எதையும் தீர ஆலோசித்து செயல்படக்கூடிய திறன் கொண்டவர்கள் என்பதால் இவர்கள் எந்த ஒரு வேலையும் முனைப்போடு செய்து வெற்றி பெற்று விடுவார்கள்.
மகரம்:
மகர ராசியினர் எப்பொழுதும் தனித்துவமாக செயல்படக்கூடியவர்கள். மேலும், இவர்கள் ஒரு விஷயத்தை கற்று தெரிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள். ஆதலால் இவர்கள் தனக்கு எந்த விஷயமும் வராது என்று சொல்லாமல் கற்று கொள்வதால் யாரும் இவர்களிடம் போட்டி போட முடியாத நிலை வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |