ஆடிப்பூரம் அன்று வீட்டில் அம்பாளுக்கு எப்படி வளைக்காப்பு நடத்துவது?
ஆடி மாதத்தில் வரும் ஆடி பூரம் மிக விஷேசமானது.அதிலும் பெண்கள் இந்த நாளில் அம்பாளை வழிபடுவதால் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடக்கிறது.
குழந்தைகளுக்காக காத்திருப்பவர்கள் திருமணம் வரன் தேடுபவர்கள் அனைவரும் இந்த ஆடி பூரத்தில் அம்மனுக்கு விரதம் இருக்க அவர்கள் கேட்ட பாக்கியம் உடனே அம்பாள் அருள்புரிவாள்.
இன்று ஆகஸ்ட் 6 ஆம் தேதி, மாலை 6:41 மணிக்கே பூரம் நட்சத்திரம் பிறந்து வருகிறது. நாளை ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு 9:03 மணி வரை பூரம் நட்சத்திரம் இருக்கிறது.
நாளைய தினம் தான் ஆடிப்பூரம். நாளை காலை 6:15 – 7:15, 9:15 -10:15 இந்த நேரத்தில் அம்பாள் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
காலை நேரத்தை தவறவிட்டவர்கள், நாளை மாலை 6:30 – 7:30 மணி வரை அம்பாளை வழிபாடு செய்யலாம். நாளை வீடுகளை சுத்தம் செய்து ஒரு மரப்பலகையில் மேல் அம்பாளின் உருவ படம் வைத்து அல்லது அம்பாளின் சிலை வைத்து வழிபடவேண்டும்.
பிறகு அம்பாளுக்கு பூக்களால் அலங்காரம் செய்து வளையல் எடுத்து கோர்த்து அதை மாலையாக அம்பாளுக்கு போடா வேண்டும்.
பிறகு அம்பாளுக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அம்பாளுக்கு கலவை சாதத்தை நெய் வைத்தியம் படைத்து குடும்பத்தோடு அம்பாளிடம் மனதார வேண்டுதல்களை வைக்கவேண்டும்.
மேலும் நாம் 1 மாதம் கர்ப்பிணி பெண்களுக்கு எப்படி வளைகாப்பு செய்வோமோ அதைபோல் தான் அம்பாளுக்கு செய்யவேண்டும்.
விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அம்பாளுக்கு கலவை சாதத்தை நெய் வைத்தியமாக வையுங்கள். அம்பாளிடம் குடும்பத்தோடு மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
பிறகு திருமணம் ஆகி குழந்தை குழந்தைக்காக காத்திருக்கும் பெண்ணை மனப்பலகையில் அமர வைத்து நலுங்கு வைத்து அம்பாளுக்கு போடப்பட்ட வளையல் மாலையை எடுத்து அந்த பெண்ணினுடைய கையில் போட்டு வளைகாப்பு நடத்தினால் அந்த பெண்ணுக்கு அடுத்த வருடமே குழந்தை பாக்கியம் கிடைத்துவிடும்.
இதுதான் இந்த வழிபாட்டில் இருக்கக்கூடிய நம்பிக்கை.
பிறகு அம்பாள் கழுத்தில் போட்ட வளையலை எடுத்து நாலு பேருக்கு தானம் செய்தால் குடும்பத்துக்கு நிச்சயம் நல்லது நடக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |