ஆனி மாத அமாவாசை.., ராமேஸ்வர அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள்
ராமேஸ்வரத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.
அமாவாசை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
அந்த வகையில் ராமேசுவரத்திற்கு ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
மறைந்த முன்னோர்களுக்கு அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
அதனைத் தொடர்ந்து கோயிலுக்குள்ளே காவேரி, சேது மாதவர், மகாலட்சுமி உள்ளிட்ட 22 புனித தீர்த்தங்களில் புனித நீராடினர்.
பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாளை சுவாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் அவர்கள் தனுஷ்கோடி, அரிச்சல்முனை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கடல் அழகை ரசித்தனர்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |