எந்த நபரை தீய சக்திகள் நெருங்காது?
உலகம் போட்டி பொறாமை நிறைந்தது.அப்படியாக சிலரது வளர்ச்சி பொறுக்காமல் மனம் குமுறுவது உண்டு.இன்னும் சில பேர் சற்று ஒரு படி மேலே சென்று அவர்களுக்கு தீயது நடக்க செய்வினைகள் செய்வார்கள்.
அந்த வகையில் ஒருவர் நமக்கு தீயது நினைத்து செய்வினைகள் செய்ய நமக்கு நேரம் நல்ல நேரமாக இருந்தாலும் பாதிப்புகளை உண்டாக்கி விடும்.நாம் இப்பொழுது ஒருவருக்கு செய்வினை பாதிப்புகள் இருப்பதை எவ்வாறு கண்டறிவது எப்படி?அவ்வாறு பாதிப்புகள் உண்டானால் அதை சரி செய்வது எப்படி என்று பார்ப்போம்.
ஒருவர் நமக்கு செய்வினை வைத்திருந்தால் நாம் எப்பொழுதும் மந்தமாகவே காணப்படுவோம்.என்னதான் உணவு உட்கொண்டாலும் உடல் ஆரோக்கியம் குறைந்து விடும்.நினைத்த நேரத்தில் குலதெய்வ வழிபாடு செய்யமுடியாது.இறைவன் மீது நாட்டம் வராது.
வீட்டில் அடிக்கடி பிரச்சனை நஷ்டம் உண்டாகும்.இவ்வாறு இருண்ட சூழலில் வாழ்க்கை இருந்தால் பயம் அடையாமல் நாம் இறைவனை சரண் அடையவேண்டும்.துர்க்கை அம்மனுக்கு குருதி பூஜை செய்ய வேண்டும். அதாவது, துர்க்கை அம்மன் படத்தை பூஜை அறையில் வைத்து தண்ணீரிலோ அல்லது பன்னீரிலோ குங்குமத்தை கரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்து இருக்க வேண்டும்.
பின் உதிரி பூக்களை ஒரு தட்டில் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் 108 துர்க்கை அம்மன் துதிகளை கூறி இந்த பூக்களை எடுத்து குங்குமம் கலந்த தண்ணீரில் நனைத்து துர்கை அம்மனுக்கு அர்ச்சனை செய்யவேண்டும்.
108 துதிகள் தெரியாதவர்கள் ஓம் துர்க்கை அம்மன் போற்றி என்ற மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்யலாம். இதனை தினமும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை செய்யலாம். இதை தினமும் செய்தல் நல்ல பலன் கிடைக்கும்.முடியாதவர்கள் வெள்ளி செவ்வாய் அன்று செய்யலாம்.
செய்வினை இல்லை என்றாலும் இவ்வாறு செய்யும் பொழுது நமக்கு உண்டான கஷ்டங்களும் விலகும்.மனமும் தெளிவடையும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |