போக பாக்கியமும் புத்ர பாக்கியமும் அருளும் பட்டமங்கலம் குருபகவான்

By பிரபா எஸ். ராஜேஷ் Dec 26, 2024 05:27 AM GMT
Report

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூரில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் பட்டமங்கலம் உள்ளது. இங்கு ஆதி சிவன் சுந்தரேஸ்வரர் என்றும் பார்வதி சௌந்தர்ய நாயகி என்றும் அழைக்கப்படுகின்றனர். இக்கோவிலுக்கு நேர் எதிரே வெளியே ஆல மரத்தின் அடியில் குரு பகவான் தனி கோயில் கொண்டிருக்கின்றார்.

 குரு ஸ்தலம்

குரு எனப்படும் வியாழ பகவான் ஒருவர் ஜாதகத்தில் போக சுகத்தையும் புத்ர பேறையும் கொடுக்கும் அதிகாரம் படைத்தவன். சுக்கிரன் காதலையும் காம் உணர்ச்சியையும் கொடுப்பான். ஆனால் குரு பகவானே குடும்பம், தாம்பத்யம், குழந்தை என்ற நற்பேறுகளை வழங்கக் கூடியவர்.

பட்டமங்கலம் கோயிலில் தெற்கு நோக்கிய தட்சிணாமூர்த்தியாக இல்லாமல் கிழக்கு நோக்கிய குருவாக அமர்ந்து கார்த்திகை பெண்களுக்கு அஷ்டமா சித்தியை உபதேசம் செய்கின்றார்.

போக பாக்கியமும் புத்ர பாக்கியமும் அருளும் பட்டமங்கலம் குருபகவான் | Pattamangalam Guru Bhagavan Temple

உப சந்நிதிகள்

பட்ட.மங்கலம் குரு பகவான் கோவிலில் முருகனுக்குத் தனி சன்னதி உண்டு. இங்கு முருகன் ஐந்து முகம் கொண்டவராகக் காட்சி அளிக்கின்றார். வள்ளி தெய்வானையும் உள்ளனர். முருகன் இங்கு சிவனாக ஐந்து முகத்துடன் கோயில் கொண்டிருப்பதாக ஐதீகம். அருகில் நாவல் மரத்தடியில் நாவலடி காளி எழுந்தருளியுள்ளாள். இவளுக்கும் ஒரு புராணக்கதை சொல்லப்படுகின்றது. 

விசேஷ வழிபாடுகள்

பட்ட.மங்கலம் குரு பகவான் கோவிலில் மாசி மகம், மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் அம்மனுக்கும் சிவனுக்கும் முருகனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.  

பூதம் கட்டிய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

பூதம் கட்டிய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

மர வழிபாடு

பல ஆயிரம் ஆண்டுகள் பழையதாக சொல்லப்படுகின்ற பட்டமங்கலத்து ஆல மரம் ஒரு தெய்வ மரமாக விளங்குகின்றது. 

தமிழர் சமய வரலாற்றில் முதலில் தோன்றியது இயற்கை வழிபாடு. மர வழிபாட்டின் வேர்கள் உலகமெங்கும் பரவியுள்ளன. அமெரிக்க ஐரோப்பிய ஆப்பிரிக்க நாடுகளிலும் மாரா வழிபாடு இருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இன்று கிறிஸ்துமஸ் மரம் வைக்கப்படுகின்றது.

அரிய மரங்களை வியந்து நோக்கிய நம் முன்னோர் அவற்றைக் தெய்வமாகக் கருதினர். பின்னர் இம்மரங்களின் அடியில் நபியூகள், சாமி சிலைகள் வைத்து வணங்கினர். கௌதம புத்தர் ஆலமரத்தின் அடியில் ஞானோதயம் பெற்றதால் பௌத்த சமயத்தினர் அம்மரத்தை போதி மரம் என்று வணங்கினர்.

போக பாக்கியமும் புத்ர பாக்கியமும் அருளும் பட்டமங்கலம் குருபகவான் | Pattamangalam Guru Bhagavan Temple

இம்மரங்கள் பின்னர் ஸ்தல விருட்சங்களாக போற்றப்பட்டன. புதிய தெய்வ கதைகளும் எழுதப்பட்டன. குரு பகவான் ( கல்லாலமரம்), விநாயகர், நாகர் (அரசமரம்) மரத்தடி தெய்வங்கள் ஆயினர். பிலாவடி கருப்பு, நாவலடி காளி என்று கிராம தெய்வங்களும் அவற்றின் இருப்பிடமான மரங்களின் பெயரால் அழைக்கப்பட்டன.  

கதை 1

திருவிளையாடல் கதை

மற்ற சிவன் கோவில்களுக்கு கதை இருப்பது போலவே பட்டமங்கலம் குருபகவான் சுந்தரேஸ்வரர் கோவிலுக்கும் ஒரு கதை உண்டு. இக்கதை திருவிளையாடல் புராணத்தில் 33வதாக இடம்பெற்றுள்ளது. கதம்பவன புராணம் என்பது இக்கதையின் பெயர்.

இதில் கார்த்திகைப் பெண்டிர் கல்லாக மாறிய கதை இடம்பெற்றுள்ளது. திருவிளையாடல் புராணம் மதுரையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை விரித்து உரைப்பதாக நம்பப்பட்டாலும் கூட அந்நூல் ஹாலாஸ்ய புராணம் என்று வடமொழியில் எழுதப்பட்ட நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.

ஹாலாஸ்ய புராணத்திற்கு தமிழில் மூன்று மொழிபெயர்ப்புகள் உண்டு. அவற்றுள் பரஞ்சோதி முனிவரின் மொழிபெயர்ப்பு சிறப்பானதாகக் கருதப்பட்டு அதிகமானோரால் வாசிக்கப்படுகின்றது. 

காதல் கைகூட வேண்டுமா?அப்போ வள்ளி மலை முருகன் கோயிலுக்கு போயிட்டு வாங்க!

காதல் கைகூட வேண்டுமா?அப்போ வள்ளி மலை முருகன் கோயிலுக்கு போயிட்டு வாங்க!

கார்த்திகைப் பெண்டிர் கல்லாகினர்

முருகனை அம்பா, துலா, நிதர்த்தளி, அப்ரகேந்தி, மேகேந்தி, வரத்யேந்தி என்ற பெயர் உள்ள ஆறு பெண்கள் வளர்த்தனர். பின்பு அவர்கள் இறைவனால் கார்த்திகை நட்சத்திரமாக மாற்றப்பட்டனர், என்பது கந்தபுராணத்தின் கதை. இனி வருவது திருவிளையாடல் புராணக் கதை.

ஒரு நாள் ஆறு கார்த்திகைப் பெண்களும் திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை வணங்கித் தங்களுக்கு அஷ்டமாசித்திகளை கற்பிக்க வேண்டும் என்றனர். இவர்களுக்கு அது தேவையில்லை என்று கருதிய சிவபெருமான் அமைதியாக இருந்தார்.

அருகிலிருந்த பார்வதி தேவி அவர்களுக்கு அஷ்டமா சித்திகளை கற்பிக்கும்படி கூறினார். சிவபெருமானுக்கு பார்வதியின் பரிந்துரை பிடிக்கவில்லை. அவர் உடனே தன் மனைவி பார்வதி தேவியிடம் 'நீயே அவற்றை இப்பெண்களுக்கு கற்றுக் கொடு' என்று மடை மாற்றி விட்டார்.

போக பாக்கியமும் புத்ர பாக்கியமும் அருளும் பட்டமங்கலம் குருபகவான் | Pattamangalam Guru Bhagavan Temple

பார்வதி தேவி மகிழ்ச்சியுடன் கார்த்திகைப் பெண்களுக்கு அஷ்டமா சித்திகளை எடுத்துரைக்கும் போது அப்பெண்கள் அக்கறையின்றி அமர்ந்திருந்தனர். அவர்களின் அலட்சியப் போக்கைக் கண்ட பார்வதி தேவி 'இவர்களுக்கு பாடம் சொல்லித் தர முடியாது' என்று மறுத்துவிட்டார்.

அத்துடன் அப் பெண்களிடம் 'கல்போல் உட்கார்ந்து இருக்கிறீர்களே. நீங்கள் கல்லாய் போங்கள்' என்று சபித்து விட்டாள். கார்த்திகைப்.பெண்டிர் கண்ணீர் மல்க சிவபெருமானிடம் சாப விமோசனம் வேண்டினர். அவர் 'நீங்கள் பூலோகத்தில் கல்லாய் கிடங்கள். நான் மதுரையிலிருந்து குரு பகவானாக வந்து உங்களுக்கு அஷ்டமா சித்திகளை உபதேசித்து அருள் புரிவேன்' என்றார்.

திருவல்லா மகாவிஷ்ணு சுதர்சன மூர்த்தி திருக்கோவில்

திருவல்லா மகாவிஷ்ணு சுதர்சன மூர்த்தி திருக்கோவில்

கதை 2

காளி வந்த கதை

பாரவ்தி தேவி கணவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, கார்த்திகைப் பெண்களுக்கு அஷ்டமா சித்தியை அமைதியாக உபதேசிக்காமல் அவர்கள் மீது சினம் கொண்டு அவர்களைச் சபித்த காரணத்தால் சிவபெருமான் அவள் மீது கடும் கோபம் கொண்டார்.

அவளைப் பார்த்து 'உன் சௌந்தர்யம் இழந்து கோர ரூபம் கொண்டு காளியாகப் பூலோகத்திற்கு போ' என்று சபித்து விட்டார். தேவலோகத்தில் இருக்கும் தேவர்களுக்கு பூலோகம் என்பது தண்டனை அனுபவிக்கும் இடமாகும். பூலோகத்தில் பிறப்பு எடுப்பது என்பது பாவம் செய்தவருக்கு மட்டுமே நடக்கும்.

புண்ணியம் செய்தோர் மேலோகத்தில் இருப்பர். சாபம்.பெற்ற பார்வதி படடமங்கலத்தில் ஒரு நாவல் மரத்தின் அடியில் காளியாக வந்தமர்ந்தாள். அங்கேயே இறைவனை எண்ணித் தவம் புரிந்தாள். அருகே ஒரு ஆலமரத்தடியில் அவளால் சபிக்கப்பட்ட ஆறு கார்த்திகைப் பெண்டிரும் ஆறு கல் பாறைகளாகக் கிடந்தனர். காலம் உருண்டோடியது.

போக பாக்கியமும் புத்ர பாக்கியமும் அருளும் பட்டமங்கலம் குருபகவான் | Pattamangalam Guru Bhagavan Temple

சாப விமோசனம்

பார்வதியும் கார்த்திகை பெண்டிரும் சாபம் நீங்கும் நன்னாள் வந்தது. மதுரையில் இருந்து சிவபெருமான் குரு பகவானாகப் புறப்பட்டு வந்து ஆலமரத்தடியில் அமர்ந்தார். அவர் வந்து அமர்ந்ததும் கல்லாகக் கிடந்த கார்த்திகைப் பெண்கள் பெண்ணாக உருமாறி அவரிடம் அஷ்டமா சித்தியைக் கேட்டு அறிந்தனர்.

சிவபெருமான் கார்த்திகை பெண்டிரின் வேண்டுகோளை ஏற்று பட்டம்ங்கலத்தில் ஆதிசிவனாகக் கோயில் கொண்டார். பின்பு அருகில் நாவல் மரத்தடியில் காளி உருவில் இருக்கும் த்வமிருக்கும் பார்வதியின் சாபத்தை விலக்கி அவளை சௌந்தர்யமுள்ள பெண்ணாக மாற்றினார்.

தன் அருகிலேயே சௌந்தர்யநாயகியாக சேர்த்துக் கொண்டார். சிவபெருமான் மதுரையில் இருந்து குருவாக வந்ததால் இங்கே எழுந்தருளி இருக்கும் சிவபெருமானை சுந்தரேஸ்வரராகவும் அம்மனை மீனாட்சி அம்மனாகவும் மக்கள் வழங்குகின்றனர். 

பால் பொழிந்ததால் பாலமலை

பால் பொழிந்ததால் பாலமலை

குழந்தை வரம் பெற

குரு பகவானின் வியாழ நோக்கம் திருமணத்துக்கு மிகவும் அவசியம் ஆகும். குரு பார்க்க கோடி நன்மை நிகழும். எனவே திருமண தடை இருப்பவர்களும் கரு சிதைவு, கரு உண்டாவதில் சிக்கல், செயற்கை கருத்தரிப்பு போன்ற கர்மா தொல்லைகளால் அவதிப்படுவோர் இது திருத்தலத்துக்கு வந்து குருவுக்கு 108 கலசாபிஷேகம் செய்தால் கர்ம வினை நீங்கி திருமணம் நடைபெறும். நல்ல தீர்க்காயுளும் தேக சுக ஆரோக்கியமும் கொண்ட குழந்தை பிறக்கும். 

108 கலசாபிஷேகம்

சிறப்பு நாட்களில் இங்கு குருபகவானுக்கு கலசாபிஷேகம் நடைபெறும். குரு பெயர்ச்சி அன்றும் 108 கலச பூஜை நடைபெறும். இந்நாளில் இக் கோவிலுக்கு வந்து குரு பகவானை வழிபடுகின்றவர்கள் குரு பெயர்ச்சியால் மிகுந்த நன்மையை அடைகின்றனர். அடுத்த குரு பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறுகின்றது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.

+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US