புதன் பகவான் ஆதரவால் 2025ஆம் ஆண்டு அசத்த போகும் ராசிகள்
நவகிரகங்களில் குறுகிய காலத்தில் தன்னுடைய இடத்தை மாற்ற கூடியவர் புதன் பகவான்.இவரை நவகிரகங்களின் இளவரசன் என்றே சொல்லலாம்.அப்படியாக இந்த புதன் பகவானின் இடம் மாற்றம் பல ராசிகளுக்கு பல மாற்றத்தை கொடுக்கும்.
புதன் என்றாலே படிப்பு,வியாபாரம் நரம்பு சம்பந்தப்பட்ட விஷயங்களின் காரணியாக விளங்கக்கூடியவர்.அந்த வகையில் வருகின்ற 2025ஆம் ஆண்டு புதன் பகவான் முதல் வாரத்தில் தனது ராசியை மாற்ற உள்ளார்.அவர் பிறகு விருச்சிக ராசிக்கு செல்கிறார்.விருச்சிகம் குரு பகவானின் சொந்த ராசி ஆகும்.இதனால் புதன் அருளால் 2025ஆம் ஆண்டு அசத்த போகும் ராசிகள் யார் என்று பார்ப்போம்.
சிம்மம்:
சிம்ம ராசியில் ஐந்தாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கிறார்.இதனால் இவர்களுக்கு விபரீத ராஜயோகம் உண்டாகும்.வெளிநாடுகளில் தொழில் செய்பவருக்கு இது ஒரு வசந்த் காலம்.வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் இவர்களுக்கு கிடைக்கும்.மனதில் உண்டான காயங்கள் முற்றிலுமாக விலகும்.மாணவர்களுக்கு அவர்கள் நினைத்த படிப்பை படிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.வீட்டில் தடை இன்றி சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.
துலாம்:
துலாம் ராசியில் மூன்றாவது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்கிறார்.இதனால் சோர்வடைந்த மனதில் உற்சாகம் பிறக்கும்.கடந்த கால கவலைகள் எல்லாம் விலகும்.2025 புத்தாண்டு உங்களுக்கு எல்லா விதமான சந்தோஷங்களையும் கொடுக்க போகிறது.உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பு உயரும்.குடும்பத்தில் சந்தோசம் அதிகரிக்கும்.வழக்கு சம்பந்தமான விஷயங்கள் சாதகமாக அமையும்.
கும்ப ராசி:
கும்ப ராசியில் 11வது வீட்டில் புதன் பகவான் பயணம் செய்யப்போகிறார்.வியாபாரத்தில் நீங்கள் போட்ட முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.திருமண வரன் தேடுபவர்களுக்கு நல்ல வரன் அமையும்.நீங்கள் எதிர்பார்த்த வேலை உங்களுக்கு கிடைக்கும்.வெளிநாடு சென்று படிக்கவேண்டும் என்று விரும்பும் மாணவர்களுக்கு இது ஒரு பொற்காலம்.புதிய தொழில் செய்யும் யோகம் கிடைக்கும்.கல்வியில் குழந்தைகள் சிறந்து விளங்குவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |