வீட்டில் சனிபகவான் படத்தை வைத்து வழிபாடு செய்யலாமா?
நவகிரகங்களில் மக்கள் மிகவும் பயம் கொள்பவர் சனிபகவான்.இவர் சரியான நேரத்தில் நமக்கு என்ன பாடம் கற்பிக்க வேண்டுமோ அதை சரியாக செய்துவிடுவார்.சமயங்களில் அந்த பாடம் கடினமாக கூட இருக்கலாம்.அது அவர் அவர் செய்த கர்மவினைகள் பொறுத்து உள்ளது.
அப்படியாக அவர்கள் சனி பெயர்ச்சி நடக்கும் காலங்களில் மறக்காமல் சனிக்கிழமை தோறும் சனிபகவான் ஆலயம் சென்று வழிபாடு செய்து சனியின் தாக்கம் குறைய எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்வார்கள்.அந்த வகையில் நாம் வீடுகளில் சனி பகவானின் படத்தை வைத்து வழிபாடு செய்யலாமா?என்று பார்ப்போம்.
அதாவது வாழ்க்கையில் நேரம் சரி இல்லை என்றால் நல்லவர்களும் கெட்டவர்கள் ஆகிவிடுவார்கள்,நேரம் நன்றாக இருந்தால் கெட்டவர்களும் நல்லவர்களாக ஆகிவிடுவார்கள்.ஆனால் இப்படியானவர்களுக்கு சனி திசையின் பொழுது அவர்களுக்கு ஏற்ற உரிய தண்டனையும் புரிதலும் அவர் வழங்கிவிடுவார்.
அதனால் தான் சனிபகவானை நீதிமான் என்கின்றனர்.சனீஸ்வரனின் பார்வை மிக உக்கிரமாக இருக்கும்.நாம் பெரும்பாலும் உக்கிர தெய்வங்களின் படத்தை வீட்டில் வைத்து வழிபாடு செய்வதில்லை.அதனால் தான் சனீஸ்வரர் படங்களை வீட்டில் வைத்து யாரும் வழிபாடு செய்யக்கூடாது என்று சொல்வார்கள்.
மேலும்,சனீஸ்வரரின் நேரடிப் பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால் கருப்புத் துணியால் தன்னுடைய கண்களை மூடிக் கொண்டுள்ளார். சனிபகவான் மனிதர்கள் மட்டும் அல்லாமல் தேவர்களையும் எப்பொழுதும் அவருடைய பார்வையால் கவனித்து கொண்டு இருப்பார்.
எவர் ஒருவருக்கு அகங்காரம்,வீண் பொய் அகந்தையோடு நடக்கின்றாரோ அவர்களை சரியான நேரத்தில் தண்டிக்காமல் விடமாட்டார்.ஆக நவகிரகங்கள் என்பவர்கள் கடவுள் சொல்லிய பணியை செய்யும் வேலையாட்கள் ஆவர்.
எனவே சனீஸ்வரர் மட்டுமல்ல ராகு, கேது, குரு, சுக்கிரன் உள்பட எந்தக் கோள்களையும் வீட்டில் வைத்து வணங்கக் கூடாது என்றும் ஜோதிட சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |