வீட்டில் உள்ள தரித்திரம் விலக நாம் என்ன செய்யவேண்டும்?
நம் வாழ்க்கையில் எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள கூடாது.எந்த ஒவ்வொரு விஷயம் செய்வது என்றாலும் நாம் முழுமனதோடு செய்யவேண்டும்.அவ்வாறு செய்யும் பொழுது அதில் கிடைக்கும் வெற்றி தோல்வியை மனம் மனதார ஏற்று கொள்ளும்.
ஆனால் அதை செய்யாமல் நாம் மனம் வருந்துவது தவறான செயல் ஆகும்.அதே போல் தான் நம் வீடுகளை சுத்தமாக வைக்கவேண்டும்,தினமும் விளக்கு ஏற்றவேண்டும் என்பது கட்டாயம் பின்பற்ற வேண்டிய கடமைகள் ஆகும்.
ஆனால் பலரும் அதை சரியான முறையில் பராமரிக்காமல் விடுவதால் அவர்கள் வீட்டில் சில கஷ்டங்கள் உண்டாகி விடும்.பிறகு வருந்தி கொண்டு இருப்பார்கள்.நாம் இப்பொழுது நம்மை அறியாமல் செய்யாதவறிய தவறுகளால் உண்டான கஷ்டங்கள் விலக என்ன செய்வது என்று பார்ப்போம்.
நாம் பெரியோர்கள் சொல்லி கேள்வி பட்டு இருப்போம்.வீட்டைசரியான முறையில் பராமரிக்கவில்லை என்றால் அது தரித்திரம் என்று.அவ்வாறு தரித்திரம் ஏற்பட்டு விட்டால் வீட்டில் நிதி இழப்புகள்,உடல்நலன் குறைபாடுகள் உண்டாகும்.
இன்னும் சொல்லப்போனால் வீட்டின் நிம்மதி முழுமையாக குறைந்து விடும்.இப்படியாக தரித்திரம் உருவாக பல காரணங்கள் இருக்கலாம்.அந்த நிலைமையை மாற்ற சில வழிமுறைகள் வீட்டில் செய்தால் போதும் நாம் நல்ல பலன்களை பார்க்க முடியும்.
மேலும்,இந்த வழிபாட்டை பெண்களைப் விட ஆண்கள் செய்வது சிறந்ததாக சொல்லப்படுகிறது.அப்படி ஆண்கள் இதை செய்யமுடியாத சூழலில் பெண்கள் செய்யலாம்.சிலர் வீட்டில் கோயில் செல்வது என்றால் என்னவென்று கேட்பார்கள்?அந்த அளவிற்கு கடவுளை விட்டு விலகியே இருப்பார்கள்.
ஆக இவ்வாறு சூழ்நிலை உண்டாகும் பொழுது தினமும் கோயிலுக்கு செல்ல முடியவில்லை என்றாலும்,மாதம் ஒரு நாள் சென்றால் போதும்.அதிலும் கோயிலில் அதிகாலை நடக்கும் பூஜை வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும்.
அப்படி சென்று அங்கு கிடைக்கும் அபிஷேக நீரை வீட்டிற்கு கொண்டு வந்து தெளிக்க வேண்டும்.அதே போல் இந்த தண்ணீரைக் கொண்டு வந்து வீட்டில் தெளிப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் தரித்திர சூழ்நிலை மாறி நல்ல சூழல்நிலை உருவாகும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த முறை செய்வதற்கு காலை வேலை மட்டும்தான் சிறந்தது.ஆன்மீகத்திலும் வாழ்க்கையிலும் சரி செய்யமுடியாத காரியம் என்று எதுவும் இல்லை.ஆக இறைவனை மனதார வழிபாடு செய்து சில பரிகாரம் செய்ய நம் வாழ்க்கையில் சிறந்த மாற்றங்கள் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |