திருமணம் ஆன பெண்கள் தவறியும் காலில் கருப்பு கயிறு அணியாதீர்கள்
ஜோதிடத்தில் கைகளில் மற்றும் கால்களில் கருப்பு கயிறு அணிவது மிக சிறந்த பலனை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.அவ்வாறு கயிறு அணியும் பொழுது நமக்கு தேவை இல்லாத பயம் உண்டாகாது.மேலும் நாம் அணியும் கயிறு நம்மை நோக்கி வரும் எதிர்மறை ஆற்றலில் இருந்து காப்பாற்றும்.
இந்நிலையில், சிலர் கருப்பு கயிறு அணிவதை தவிர்க்க வேண்டும் அல்லது கருப்பு கயிறு அவர்களுக்கு அசுபமாகக் கருதப்படுகிறது என்றும் ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அப்படியாக திருமணம் ஆன பெண்கள் காலில் கருப்பு கயிறு அணியலாமா?என்ற கேள்விகள் இருக்கும்.அதை பற்றி பார்ப்போம்.
பொதுவாக நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் கருப்பு நிறம் அசுபமாக கருதப்படுவதால் பலரும் இதை தவிர்த்து விடுவார்கள்.அதிலும் குறிப்பாக திருமணம் ஆன பெண்கள் கட்டாயம் கருப்பு நிற பொருட்கள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.
ஆனால் திருமணம் ஆன பெண்கள் கட்டாயம் கருப்பு நிற கயிறு அணியலாம்.ஆனால் அதை காலில் அணிவதை காட்டிலும் கையில் அணிவது தான் சிறந்தது என ஜோதிடம் சொல்கிறது.
அதாவது,திருமணமான பெண்ணின் கையில் வியாழன் வாசம் செய்வதாகவும், வியாழனுடன் சனி வருவது சுபமாக கருதப்படுகிறது. இவ்வாறு அவர்கள் அணியும் பொழுது அவர்களுக்கு ஏற்பட்ட சனி தோஷம் விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |