நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஆன்மீக தகவல்கள்
நாம் தெரியாமல் சில பாவங்களை செய்து விடுகிறோம். பின்பு செய்த பாவத்திற்கு பரிகாரம் தேடி அலைகின்றோம்.
அப்படியாக பாவங்கள் தீர்க்க வேண்டும் என்றால் முதலில் நமக்கு நினைவுக்கு வருவது ராமேஸ்வரம்.
அங்கு சென்றால் நம் பாவங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது.
ஒருமுறை ராமபிரான் தன்னுடைய தோஷம் நீக்கும் பொருட்டு சிவபெருமானை அங்கு வழிபட்டு தோஷத்தை போக்கிய தலம்.
இத்தலத்தில் மூன்று நாட்கள் தங்கி கடலில் நீராடி சுவாமி தரிசனம் செய்ய நம் பாவங்கள் விலகும்.
மேலும் நம் பாவம் தீர சில கோவில்களுக்கு செல்ல முடியாமல் போனால் பசுவிற்கு பழங்கள் கீரைகள் கொடுத்து வர நம் பாவங்கள் விலகும்.
நம் எல்லோர் வீட்டிலும் பூக்கள் பூச்செடிகள் வளர்ப்பது ஒன்று. அப்படி நாம் மாலை அல்லது இரவு நேரங்களிலோ பூக்களை பறிப்பதை தவிர்க்க வேண்டும்.
அமாவாசை அன்று செடி கொடிகளை தொடவோ நிலைகளை உதிர்ப்பதோ வெட்டுவது கூடாது என்று சொல்கின்றனர்.
எல்லோர் வீட்டிலும் மாலை நேரங்களில் விளக்கேற்றி பூஜை செய்வது உண்டு. அப்படி பூஜை செய்யும் பொழுது நம் வீட்டில் பழங்களோ இல்ல பூக்களோ வைத்து பூஜிப்பது உண்டு.
அப்படி என்றாவது ஒரு நாள் பழங்களும் பூக்களோ வைத்து நம்மால் பூஜை நேரங்களில் விளக்கேற்றும் பொழுது வைக்க முடியாமல் போனால் வெறும் நீரை வைத்து மட்டும் கூட பூஜை செய்யலாம்.
பூஜை செய்வதற்கு அலங்கார பூக்களோ, பழங்களோ தவிர்த்து நல்ல மனம் தான் முக்கியம்.
மேலும் வைகாசி மாதம் தேய்பிறை, ஏகாதசி அன்று விரதம் இருந்து கல்வி கற்பவர்களுக்கு உதவி செய்து வந்தால் நமக்கு வரும் எதிர்பாராத ஆபத்துகளில் இருந்து அந்த விரத பலன் நம்மை காப்பாற்றும்.
இந்த உலகத்தில் சிறந்த விஷயங்களில் ஒன்று ஞானமும் அமைதியும். ஒருவர் தினமும் காயத்ரி மந்திரம் சொல்லி வர அவருடைய நினைவாற்றல் பெருகி அவருக்கு ஞானமும் அமைதியும் கிடைக்கும்.