திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சப்பர பவனி கோலாகலம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது.
இக்கோவிலில் ஆவணித் திருவிழா கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி- அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீடி உலா வருகிறார்கள்.
8ஆம் நாள் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6.15 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
இன்று அதிகாலை சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி காலை 8.30 மணிக்கு சப்பரபவனி தொடங்கியது.
சுவாமி சண்முகர் வள்ளி- தெய்வானையுடன் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.
இதனை தொடர்ந்து 11.30 மணிக்கு மேல கோவிலில் இருந்து சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் நடக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







