கோயிலில் உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால் அபசகுனமா?
நாம் எப்பொழுதும் கோவில் வழிபாடு மேற்கொள்ளும் பொழுது பூஜைக்கு தேங்காய் வாங்கி செல்வது வழக்கம். நாம் பார்த்து பார்த்து வாங்கி செல்லும் தேங்காய் நல்ல நிலையில் இருக்கின்றதா என்பதை நாம் பூஜையில் உடைக்கும் பொழுது தான் தெரிந்து கொள்ள முடியும்.
அவ்வாறு பூஜையின் பொழுது உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால் அவை நமக்கு தீமையை விளைவிக்குமா என்று பலருக்கும் சந்தேகம் இருக்கின்றது. அதை பற்றி பார்ப்போம். நம் கோயில்களில் பூஜைக்கு வாங்கி செல்லும் தேங்காய் உடைக்கும் பொழுது அதில் பூ இருந்தால் மிகவும் நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது.
மேலும் அவை நாம் இறைவனிடம் வைத்த பிரார்த்தனை விரைவில் நிறைவேறும் என்பதை உணர்த்தக் கூடியதாக இருக்கிறது. அதேபோல் இறைவனுக்கு உடைக்கும் தேங்காய் முழு கொப்பரையாக இருந்தால் வீடு சுப நிகழ்ச்சிகள் நடக்கும் என்பதை உணர்த்துவது ஆகும்.
அதேபோல் நாம் இறைவனுக்கு உடைக்கும் தேங்காய் அழுகி இருந்தால் அவை நம் வீடுகளில் உள்ள துன்பங்கள் மற்றும் தீய சக்திகள் விலகுவதின் அறிகுறியாக ஆன்மீக சாஸ்திரத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால் பெரும்பாலும் பக்தர்கள் இவை தவறாகவே புரிந்து கொள்கிறார்கள் பூஜையின் பொழுது உடைக்கப்படும் தேங்காய் அழுகியிருந்தால் அனைவரும் ஒரு வித பதட்டத்திற்கு ஆளாகிறார்கள்.
குடும்பங்களில் ஏதேனும் தீய நிகழ்வுகள் நடந்து விடுமோ என்று அஞ்சுகிறார்கள். ஆனால் அவ்வாறு பயம் கொள்ள தேவை இல்லை. அவை நம் குடும்பத்தில் பிடித்த துர் சக்திகள் விலகியதின் அறிகுறியே ஆகும்.
ஆக இவ்வாறு பூஜையின் பொழுது தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் பயம் கொள்ள வேண்டாம். இறைவன் உங்கள் அருகில் இருந்து உங்கள் குடும்பத்தை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் என்று அவருக்கு நன்றியை செலுத்தி வழிபாடு செயுங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







