இந்த 3 ராசிகளில் பிறந்த பெண்களை யாராலும் அசைக்கமுடியாதாம்
பெண்கள் மிகவும் அதிக வலிமை கொண்டவர்கள். எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையில் பெண்கள் தள்ளப்பட்டாலும் அவர்கள் அதை கடந்து செல்லும் மன தைரியம் இருக்கும். இருந்தாலும் ஒருவருடைய பிறப்பு ராசியும் அவர்களுக்கு மன தைரியமும் வலிமையும் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.
அந்த வகையில் குறிப்பிட்ட இந்த மூன்று ராசியில் பிறந்த பெண்கள் யாராலும் அசைக்கமுடியாத பெண்களாக இருக்கிறார்கள். இவர்களை எவ்வளவு முயற்சி செய்து விழ்த்த வேண்டும் என்று நினைத்தாலும் அது முடியாத காரியம் ஆகவே முடியும் முடிகிறது. அப்படியாக இவ்வளவு மன வலிமை கொண்ட பெண் ராசிகள் யார் யார் என்று பார்ப்போம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மிகவும் தெளிவாக யோசிக்கக்கூடியவர்கள். ஆனால் இவர்களை பலருக்கும் பிடிப்பதில்லை. காரணம் இவர்களின் மன வலிமையும் நம்பிக்கையும் தான். இவர்களுடைய திறமையை கண்டு பலரும் அஞ்சுவது உண்டு. மேலும் இவர்களை வீழ்த்த வேண்டும் என்று இவர்களை சுற்றி ஒரு கூட்டமே இருக்கும். ஆனால் இவர்களை அசைக்க முடியாது என்பது இவர்களிடம் போராடி தோற்றவர்களுக்கே தெரியும்.
மகரம்:
மகர ராசி பெண்கள் மிகவும் ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்கள். இவர்கள் தீர ஆராய்ந்து அதன் பின்பே முடிவெடுப்பார்கள். இவர்களுக்கு கோபமும் அதிகம் வருவதை நாம் பார்க்கலாம். மேலும் இந்த கோபமும் ஒரு காரணமாகவே இருக்கிறது. இவர்களிடம் சரியான முறையில் நடந்து கொள்ளவில்லை அல்லது சரியான முறையில் பேசவில்லை என்றால் இவர்களுடைய மறு முகத்தை நாம் பார்க்கலாம். இவர்களை எவ்வளவு சரி செய்து வீழ்த்த வேண்டும் என்று நினைத்தாலும் கட்டாயம் அது தோல்வியில்தான் முடியும்.
கும்பம்:
கும்ப ராசி பெண்கள் மிகவும் தைரியமான பெண்கள். இவர்களைப் போல் துணிச்சலாக ஒரு காரியத்தை செய்ய முடியுமா என்று கேட்டால் பலரும் யோசிப்பார்கள். இந்த ராசியில் பிறந்த பெண்களுக்கு எதிரிகள் கொஞ்சம் அதிகமாகவே இருப்பார்கள். காரணம் இவர்களுடைய தனித்துவமான திறமையும் சிந்தனையும் பலருக்கும் இவர்கள் மீது பொறாமை உண்டு செய்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







