அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயில்!

By Sakthi Raj Apr 22, 2024 10:56 AM GMT
Report

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயில் .ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து கோயிலை கட்ட வேண்டும் என்பது அங்கு வசிக்கும் இந்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.

அபுதாபியின் ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 55,000 சதுர அடி நிலத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயில்! | Abudhabi Hindutemple First Perumal Temple

 போச்சசன்வாசி அக்ஷார் புருஷோத்தமன் சுவாமி நாராயண் சன்ஸ்தா கோயில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரகங்களை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ளன.

எதிரிகளை நம் வசமாக்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு

எதிரிகளை நம் வசமாக்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு


பழமையான முறையை பின்பற்றி அதாவது கோயில் கட்டுமான பணியில் இரும்பு மற்றும் எஃகு ஆகியவை பயன்படுத்தப்படவில்லை.

முற்றிலும் கற்களை கொண்டே கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இதற்காக 20,000 டன் கற்கள் 700 கண்டெய்னர்களில் அபுதாபிக்கு கொண்டு செல்லப்பட்டன.

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயில்! | Abudhabi Hindutemple First Perumal Temple

கான்கிரீட் கலவையில் 55% சிமெண்டுக்கு பதில், பயன்படுத்தி அடித்தளத்தை நிரப்பியுள்ளனர். 300க்கும் மேற்பட்ட சென்சார்கள் பொறுத்தி அழுத்தம் வெப்பநிலை, அதிர்வுகளை தாங்குகிறதா என கண்காணித்துள்ளனர்.

கோயிலின் வெளிப்புறம் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட பிங்க் நிற மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளது கோயிலின் உட்புறம் வெள்ளை மார்பிள் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயில்! | Abudhabi Hindutemple First Perumal Temple

இது தவிர 2,000 கலைஞர்களை கொண்டு கைகளாலேயே மயில், யானை, குதிடை, ஒட்டகங்கள் செதுக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது பார்வையாளர்கள் மையம், பிரார்த்தனை மண்டபம், கண்காட்சி, கற்றல் பகுதி, குழந்தைகளுக்கான விளையாட்டு இடம் மற்றும் கடைகள் கோயிலினுள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து தரப்பு மக்களும் வந்து அமைதியான அனுபவத்தை பெற்று இந்து கலாசாராத்தை புரிந்து கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.  

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US