நாளை(16.08.2024) பெண்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கியமான விரதம்
அம்பாள் வழிபாடு எப்பொழுதும் நமக்கு தைரியத்தை கொடுக்கும்.அபப்டியாக லட்சுமி தேவியை வணங்க வாழ்க்கையில் எல்லா வித செல்வங்களும் கிடைக்கபெறுவோம். ஒருவரது வாழ்க்கையை நலமாக வளமாக மாற்ற கூடிய மகாலட்சுமி விரதமிருந்து அவள் அருளை பெறும் சிறந்த நாளே இந்த வரலட்சுமி விரதமாகும்.
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறோம்.
வரலட்சுமி விரதம் அன்று இந்த எட்டு லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.
ஆடி அல்லது ஆவணி மாதம் வளர்பிறையில் பௌர்ணமி வருவதற்கு முந்தைய வெள்ளிக்கிழமையில் கணவன் நலத்தோடும், ஆரோக்கியத்தோடும், செல்வத்தோடும் இருக்கவும், தாலி பாக்கியம் நிலைக்கவும், இல்லத்தில் செல்வம் கொழிக்கவும் வரலட்சுமி விரதத்தை சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கின்றனர்.
அதன்படி நாளை வெள்ளிக்கிழமை (16.08.2024) அன்று வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. வரலட்சுமி விரதத்தை சுமங்கலி பெண்களும், கன்னி பெண்களும், மகாவிஷ்ணுவின் தேவியான லட்சுமிதேவியை அனுஷ்டித்து வழிபடும் மிக சிறப்பான விரதமாகும்.
ஒருவர் இந்த விரதத்தை மேற்கொள்வதால் வீட்டில் மங்களகரமான சுழலும் கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ்வதால் மனைவியர் தீர்க்க சுமங்கலியாக வாழும் பாக்கியம் கிடைக்கப் பெறுகின்றனர்.
அத்துடன் நீண்ட நாட்களாக குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதியினருக்கு லட்சுமியின் அருளினால் மக்கட்பேறு பெறுகின்றனர். அதனால் இந்த விரதத்தை சுமங்கலி பெண்கள் எல்லோரும் விரும்பி மேற்கொள்கின்றனர்.
மேலும் விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றை சொல்லி வழிபட்டால் நீங்கள் நினைத்தது நடக்கும்.
விரதம் என்பது ஒரே எண்ணத்தில் இடைவிடாது ஒரே சிந்தனையில், மனதை ஒன்றின் மீதே நிலை நிறுத்துதல் ஆகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |