ராவணனை வெல்ல ராமன் சொன்ன சக்தி வாய்ந்த மந்திரம் எது தெரியுமா?

By Sakthi Raj Mar 23, 2025 01:02 PM GMT
Report

ஆன்மீகம் என்பது கடல். அதில் நமக்கு தேவையான எல்ல விஷயங்களையும் நாம் தெறிந்து கொள்ளலாம். நம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு, அதற்கான பரிகாரம் என்று நாம் தெரிந்து கொண்டு செயலாற்றும் வகையில் தான் இந்த பிரபஞ்சம் படைக்க பட்டு இருக்கிறது.

அப்படியாக, இந்த உலகமே சூரியன் சந்திரன் இவர்கள் வெளிச்சத்தால் இயங்குகிறது என்றே சொல்லலாம். ஆதலால் இவர்களை நாம் காலம் காலமாக கடவுளாக வழிபட்டு வருகின்றோம். அந்த வகையில் காலையில் கடமை தவறாமல் தன் பணியை ஆற்றும் சூரிய பகவானை வழிபாடு செய்ய நாம் எண்ணற்ற அற்புதங்கள் பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

ராவணனை வெல்ல ராமன் சொன்ன சக்தி வாய்ந்த மந்திரம் எது தெரியுமா? | Aditya Hrudayam Manthiram Palangal

இதை பழங்காலமாக பின்பற்றியும் வருகிறார்கள். அப்படியாக சூரியனே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் பரம்பொருள் என குறிப்பிட்டு பாடப்பட்டதே ஆதித்ய ஹ்ருதயம் ஆகும். சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்திய முனிவர், அன்னை பராசக்தியை நோக்கிதவம் இருந்தார்.

அன்னை பராசக்தி உலக நன்மை மற்றும் அமைதி பெறுவதற்காக அன்னையே உபதேசித்ததே ஆதித்ய ஹிருதயம் என சொல்லப்படுகிறது. நல்ல உள்ளம், மன தைரியம், உள்ளார்ந்த ஆற்றல், சக்தி ஆகியவற்றை கொடுக்கக் கூடிய சக்தி ஆதித்ய ஹிருதயத்திற்கு உண்டு.

இனி கோயிலுக்கு சென்றால் இதை செய்ய மறக்காதீர்கள்

இனி கோயிலுக்கு சென்றால் இதை செய்ய மறக்காதீர்கள்

அன்னை பராசக்தியிடம் இந்த மகா மந்திரத்தை பெற்ற அகத்தியர், தகுதியான ஒருவருக்கு இதை உபதேசித்தால் மட்டுமே இந்த உலகம் நலம் பெறும் என நினைத்து, மகாவிஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராம பிரானை தேர்வு செய்து இந்த மந்திரத்தை உபதேசம் செய்தார்.

ராவணனுடனான போரில் ராமரை வெற்றி பெற செய்தது இந்த ஆதித்ய ஹிருதயம் தான் என ராமாயணம் சொல்கிறது. அந்த வகையில் நம் வாழ்க்கையில் எப்பேர்ப்பட்ட கிரக பாதிப்புகள், இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் இந்த ஆதித்ய ஹ்ருதயம் பாடினால் ஆபத்துக்கள் நீங்கி, கஷ்ட காலங்களில் நம்பிக்கை வளரும் எண்டு நம்பப்படுகிறது.

ஆதலால் முடிந்தவர்கள் தினமும் காலையில் சூரியன் உதிக்கும் நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்ய ஹ்ருதயம் பாட எண்ணற்ற அதிசியங்களை பெறலாம். அதை மந்திரத்தை பற்றி இப்பொழுது பார்ப்போம்.  

ராவணனை வெல்ல ராமன் சொன்ன சக்தி வாய்ந்த மந்திரம் எது தெரியுமா? | Aditya Hrudayam Manthiram Palangal

ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்த்தயா ஸ்திதம் |
ராவணம் ச்சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்த்திதம் || 1 ||
தெய்வ தைஷ்ச ஸமாகம்ய த்ருஷ்டுமப்யாக தோரணம் |
உபாகம்யா ப்ரவீத் ராமம் அகஸ்த்யோ பகவான் ருஷி: || 2 ||
ராம ராம மஹா பாஹோ ஷ்ருனு குஹ்யம் ஸனாதனம் |
ஏன ஸர்வானரீன் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி || 3 ||
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸ்ர்வ ஷத்ரு வினாஷனம் |
ஜயாவஹம் ஜபேன்னித்யம் அக்ஷய்யம் பரமம் ஷிவம் || 4 ||
ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரனாஷனம் |
ச்சிந்தா ஷோக ப்ரஷமனம் ஆயுர்வர்ததனம் உத்தமம் || 5 ||
ரஷ்மி மந்தம் ஸமுத்யந்தம் தேவாசுர நமஸ்க்ருதம் |
பூஜ்யஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம் || 6 ||
ஸ்ரவ தேவாத்மகோ ஹேஷ: தேஜஸ்வி ரஷ்மி பாவன: |
ஏஷ தேவாசுரகணான் லோகான் பாதி கபஸ்திபி: || 7 ||
ஏஷ ப்ரம்மாச விஷ்ணுச்ச ஷிவ ஸ்கந்த: ப்ரஜாபதி: |
மஹேந்த்ரோ தனத: காலோ யம: சோமோ ஹ்யபாம் பதி: || 8 ||
பித்ரோ வஸவ: ஸாத்யா ஹ்யஷ்வினௌ மருதோ மனு: |
வாயுர்வஹ்னி ப்ரஜாப்ராண: ருது கர்த்தா ப்ரபாகர: || 9 ||
ஆதித்ய ஸ்விதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமான் |
சுவர்ண ஸத்ருசோ பானு: ஹிரண்யரேதா திவாகர: || 10 ||
ஹரித்ஸ்வ: ஸஹஸ்ரார்ச்சி: சப்த சப்தி: மரீசிமான் |
திமிரோன்மதன: ஷம்புஸ்த்வஷ்ட மார்த்தாண்ட அம்ஷுமான் || 11 ||
ஹிரண்ய கர்ப்ப ஷிஷிரஸ்தாபனோ பாஸ்கரோ ரவி: |
அக்னி கர்ப்போ திதே புத்ர: ஷன்க: ஷிஷிர நாஷன: || 12 ||
வ்யாமனாத ஸ்தமோபேதி ருக்யஜுஸ்ஸாம பாரக: |
கனவ்ரிஷ்டி ரபாம்மித்ரோ விந்த்யவீதி ப்லவங்கம: || 13 ||
ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கள ஸர்வதாபன: |
கவிர்விஷ்வோ மஹாதேஜா ரக்த ஸர்வபவோத்பவ: || 14 ||
நக்ஷத்ர க்ரஹதாராணாம் அதிபோ விஷ்வ பாவன: |
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதஷாத்மன் நமோஸ்துதே || 15 ||
நம: பூர்வாய கிரயே பஷ்சிமாயாத்ரயே நம: |
ஜ்யோதிர் கணாணாம் பதயே தினாதிபதயே நம: || 16 ||
ஜயாய ஜயபத்ராய ஹர்யஷ்வாய நமோ நம: |
நமோ நம: ஸஹஸ்ராம்ஷோ ஆதித்யாய நமோ நம: || 17 ||
 நம: உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம: |
நம: பத்மப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம: || 18 ||
ப்ரமஹேஷான் அச்யுதேஷாய ஸூர்யாய ஆதித்ய வர்ச்சஸே |
பாஸ்வதே ஸ்ர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷெ நம: || 19 ||
 தமோக்னாய ஹிமாக்னாய ஷத்ருக்னாய அமிதாத்மனே |
க்ரதக்னாக்னாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம: || 20 ||
தப்தசாமி கராபாய வஹ்னயே விஷ்வகர்மனே |
நமஸ்தமோபினிக்னாய ருசயே லோக ஸாக்ஷினே || 21 ||
நாஷயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ரஜதி ப்ரபு: |
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி: || 22 ||
ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரினிஷ்டித: |
ஏஷ ஏவாக்னிஹோத்ரம்ச பலம் ச்சைவாக்னி ஹோத்ரிணாம். || 23 ||
வேதஷ்ச க்ரத்வஷ்ச்சைவ க்ரதூனாம் பலமேவச |
யானி க்ருத்யானி லோகேஷு ஸர்வ ஏஷ ரவி: ப்ரபு: || 24 ||
ஏனமாபத்ஸு க்ருச்ரேப்ஷு கான்தார்யேஷு பயேஷுச |
கீர்த்தயன்புருஷ: கஷ்சின்னாவசீததி ராகவா || 25 ||
பூஜயஸ்வைனமேகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம் |
ஏதத் த்ரிகுணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயஷ்யஷி || 26 ||
அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி |
ஏவமுக்த்வா தடாகஸ்த்யோ ஜகாமச்ச யதாகதம் || 27 ||
ஏதச்சுர்த்வா மஹாதேஜா நஷ்டஷொகோ பவத்தத |
தாரயாமாஸ சுப்ரீதோ ராகவ ப்ரயதத்மவான் || 28 ||
ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷமவாப்தவான் |
த்ரிராசம்ய ஷுசிர்போத்வா தனுராத்யாய வீர்யவான் || 29 ||
ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்தாத்மா யுத்தாய ஸமுபாகமத் |
ஸர்வயத்னேன மஹதா வதே தஸ்ய த்ருதோ பவத் || 30 ||
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.





+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US