திருப்பதியில் சுமார் 20 கோடி லட்டுகளில் கலப்படம்.. வெளியான அதிர்ச்சி தகவல்
திருப்பதி வெங்கடாசலபதியை தரிசனம் செய்ய பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருகிறார்கள். மேலும் திருப்பதியில் லட்டு மிகவும் பிரபலமாக இருக்கக்கூடியது. அந்த வகையில் திருப்பதியில் கலப்பட நெய் மூலமாக 200 கோடி லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
அதாவது 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு ஆகியவற்றில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் எழும்பியது.
இந்த விவகாரத்தை விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவின் பெயரில் சிறப்பு விசாரணை குழு ஒன்று அமைக்கப்பட்டது. நெல்லூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் விசாரணை தகவல்களை குற்றப்பத்திரிக்கியாக தாக்கல் செய்தனர்.

அதில் 2019ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 48 கோடியை 76 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டதாக தெரிவித்தார்கள். அதல பயன்படுத்தப்பட்ட ஒரு கோடியே 68 லட்சம் கிலோ நெய்யில் 68 லட்சம் கிலோ நெய் போலியானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சுமார் 250 கோடி ரூபாயை முறைகேடு செய்துள்ளதாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் நெய் என கூறி தேவஸ்தானத்திற்கு சப்ளை செய்யப்பட்டவற்றில் பாமாயில் மற்றும் நறுமணம் வேதிப்பொருட்கள் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |