சூரியன் செவ்வாய் சேர்க்கை.. அதிரடி ஜாக்பாட் அடிக்கப் போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தில் சூரிய பகவான் மிக முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். இவர்தான் ஒரு மனிதனுக்கு அரசாங்கம், தலைமைத்துவ பண்பு ஆகியவற்றுக்கு காரணமாக அமைய கூடியவர். அப்படியாக செவ்வாய் பகவான் அவர்தான் ஒரு மனிதருடைய வீரம், கோபம் துணிச்சல் ஆகியவற்றை குறிக்க கூடியவர்.
ஆக இவர்கள் இருவரும் ஒரு ராசியில் சேரும் பொழுது ஒரு மிகப்பெரிய தாக்கத்தை உண்டு செய்யும். மகர ராசியில் சூரியன் செவ்வாய் சேர்க்கையானது 12 ராசிகளுக்கும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டு செய்து ஒரு சில ராசிகளுக்கு பெரிய அளவில் நன்மையை செய்ய போகிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் துணிச்சலாக முடிவெடுத்து செயல் படக்கூடிய நிலை உண்டாகும். அலுவலகத்தில் நீங்கள் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். ஒரு சிலருக்கு தங்கு நகை அல்லது வண்டி வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தந்தை உடல் நிலையில் நல்ல ஆரோக்கியம் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பு உயரும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையானது மிகப்பெரிய அளவில் இவர்களுக்கு இந்த காலகட்டத்தில் தைரியத்தை கொடுக்க போகிறது. வெளிநாடு செல்ல வேண்டும் என்று திட்டமிடுபவர்களுக்கு நல்ல யோகம் உருவாகும். உடன் பிறந்தவர்களால் இந்த காலகட்டங்களில் நீங்கள் ஒரு மிகப்பெரிய அளவில் நன்மையை பெற போகிறீர்கள்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு சூரியன் மற்றும் செவ்வாயின் சேர்க்கையானது நீண்ட நாட்களாக உங்கள் கைகளுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். வேலை செய்யும் இடங்களில் உங்களுடைய ஆளுமை திறன் மிகச் சிறப்பாக வெளிப்படும். குடும்பத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும். குடும்ப பிரச்சனையால் மன அழுத்தத்தை சந்தித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதிலிருந்து விடுபடக்கூடிய அற்புதமான காலகட்டமாகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |