இன்றைய ராசி பலன் (13-03-2026)

Report

 மேஷம்:

இன்று உங்கள் நண்பர்களிடம் இருந்து வந்த மன கசப்புகள் விலகும் நாள். தொழில் ரீதியாக இருந்து வந்த தடைகள் விலகும். கடனாக திரும்பி கொடுத்த பணத்தை வாங்குவீர்கள். வீட்டில் சந்தித்த பிரச்சனை விலகும்.

ரிஷபம்:

பணம் தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். பெற்றோர்கள் உடல் நிலையில் இருந்து வந்த ஆரோக்கிய குறைபாடுகள் விலகும். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக அமையும்.

மிதுனம்:

உங்கள் வீடுகளில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். வியாபாரம் ரீதியாக உங்களுக்கு தொந்தரவுகள் செய்தவர்கள் விலகி செல்வார்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

நீங்கள் பிறந்த தேதிக்கான அதிர்ஷ்ட பொருட்கள் என்ன தெரியுமா?

நீங்கள் பிறந்த தேதிக்கான அதிர்ஷ்ட பொருட்கள் என்ன தெரியுமா?

கடகம்:

குடும்பம் தொடர்பான நிறைய சிந்தனை மனதில் ஓடும். குடும்பத்தில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சொந்தங்கள் மத்தியில் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும் நாள்.

சிம்மம்:

அரசியல் தொடர்பாக சில எதிரிகள் வரலாம். உடன் பிறந்தவர்களால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். தாய் உடல் நிலையில் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் கிடைக்கும் நாள்.

கன்னி:

திருமண வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகள் விலகும் நாள். குழந்தைகளால் உங்களுக்கு நற்பெயர் கிடைக்கும். குடும்பத்துடன் குல தெய்வ வழிபாடுகள் செய்வீர்கள். அமைதி காக்க வேண்டிய நாள்.

துலாம்:

இன்று மனதில் குழப்பங்கள் விலகும் நாள். கோவில் வழிபாடுகளில் ஆர்வம் செலுத்துவீர்கள். கல்வி தொடர்பான விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்:

உடல் ஆரோக்கியத்தில் சந்தித்த பிரச்சனை விலகும். வாழ்க்கை துணையுடன் சற்று அமைதி காப்பது நல்லது. அத்தை வழி உறவுகளால் சில சங்கடத்தை சந்திப்பீர்கள். பொறுமை காக்க வேண்டிய நாள்.

தனுசு:

தாய் மாமன் வழியே இருந்து வந்த குழப்பங்கள் விலகும். சொந்தங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடன் இருப்பவர்களின் உண்மை முகத்தை தெரிந்து கொள்வீர்கள். பிடித்த விஷயங்களை செய்து மகிழ்வீர்கள்.

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டி: இந்த வருடம் என்ன நடக்கும்?

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டி: இந்த வருடம் என்ன நடக்கும்?

மகரம்:

நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்களின் உறவுகளிடம் இருந்து சற்று விலகியே இருப்பது நல்லது. சிலருக்கு மருத்துவ செலவுகள் வரலாம். வேலை பளு குறையும்.

கும்பம்:

வருமானத்தில் சந்தித்த தடைகள் விலகும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அரசு தொடர்பான விஷயங்களில் இருந்து வந்த மன கசப்புகள் விலகும். நன்மையான நாள்.

மீனம்:

சிலருக்கு வழக்கு விஷயங்களில் இருந்து கஷ்டங்கள் விலகும். பெரியவர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். குலதெய்வ வழிபாடுகளில் பங்கு கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US