உங்களை அறியாமல் உங்கள் கர்ம வினையை உயர்த்தும் 7 விஷயங்கள்- கவனமாக இருங்கள்
இந்த பிரபஞ்சமே கர்ம வினை என்கின்ற ஒரு கணக்கில் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நம் எண்ணமும் செயலும் தான் நமக்கான நல்ல மற்றும் கெட்ட கர்ம வினைகளை உருவாக்குகிறது. அப்படியாக தினசரி வாழ்க்கையில் நாம் செய்யக்கூடிய ஏழு விஷயங்கள் நம்மை அறியாமல் நம்முடைய கர்ம வினையை உயர்த்தக் கூடியதாக இருக்கிறது. அவை என்னவென்று பார்ப்போம்.
1.உள் உணர்வு என்பது எல்லா மனிதர்களுக்கும் செயல்படக்கூடிய ஒன்று. ஆனால் பல நேரங்களில் அதை நாம் கேட்க தவறிவிடுகின்றோம். அதை கண்டு கொள்வதில்லை.
அதை உதாசீனம் செய்து செய்யும் விஷயமும் நம்மை ஆபத்தில் சிக்க வைத்து நமக்கான கர்ம வினையை அவை உயர்த்தி விடுகிறது. அதனால் உள் உணர்வை கவனமாக கேட்பதால் நாம் நிறைய ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.

2. ஒருவர் தேவை இல்லாமல் அதிகமாக பேசுவதும் அவர்களுடைய கர்ம வினைகளை உயர்த்துவதாக இருக்கிறது. அதாவது ஒருவரை பற்றி தவறாக சொல்வது பொழுதுபோக்குக்காக ஒருவருடைய வாழ்க்கையை பற்றி புறம் பேசுதல் போன்ற விஷயங்களும் ஒரு மிகப்பெரிய கர்ம வினை கொடுத்து விடுகிறது.
3. எதுவாக இருந்தாலும் நாம் அளவாக செய்ய வேண்டும். சாப்பிடுகின்ற உணவு, குடிக்கின்ற தண்ணீர் நம்முடைய தேவைக்கேற்ப மட்டுமே அதை பயன்படுத்த வேண்டும். அளவிற்கு மீறி பயன்பாடுகளை கொண்டு வந்து அதை வீண் செய்யும் பொழுது நம்முடைய கர்ம வினை உயர்கிறது.
4. தியானம் செய்ய பழக வேண்டும். நம்முடைய கோபம் மற்றும் மனதில் இருக்கக்கூடிய வஞ்சகத்தை நாம் அழித்து வாழ வேண்டும். ஆக ஒருவர் மனதில் கோபத்தோடு அவர்கள் செயல்படும் பொழுது தீய கர்மவினை ஆனது அவர்களை சுற்றி வந்து ஏதேனும் ஒரு நேரத்தில் பாதிக்ககூடும்.

5. ஒருவருக்கு கொடுத்தசொல்லை எப்பொழுதும் காப்பாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும். தேவையில்லாத வாக்குறுதிகளை கொடுத்து ஒருவருக்கு ஆசையை வளர்த்து பின்பு அந்த செயலை செய்ய முடியாது என்று பின்வாங்க கூடாது. இதுவும் ஒரு தீய கர்மவினைகளை உருவாக்கி விடும்.
6. யாராவது தீங்கு செய்கிறார்கள் என்றால் உடனடியாக அதை மன்னித்து காலம் பார்த்துக் கொள்ளும் என்று விட்டு விட வேண்டும். தேவையில்லாத பகையை மனதில் வளர்த்துக் கொள்வதாலும் நாம் ஒரு கெட்ட கர்மாவிடம் சிக்கிக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
7. உங்கள் முன் அநீதி நடக்கிறது. ஆனால் அதை கேட்பதற்கு நீங்கள் தயக்கம் காட்டுகிறார்கள் என்றாலும் அந்த இடத்தில் உங்களுக்கு ஒரு மிகப்பெரிய அளவில் கர்ம வினை ஆனது உருவாகிவிடும். ஆக பயத்தை நீக்கி தைரியமாக இருப்பது அவசியம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |