உங்களுக்கும் - உங்கள் துணைக்கும் எத்தனை வயது வித்தியாசம் இருக்க வேண்டும்?
7-ஆம் வீட்டை ஆளும் கிரகத்தின் அடிப்படையில், ஜாதகத்திற்கு உரியவரின் திருமணம் எப்போது நடக்கும்? அவருக்கும் அவரின் வாழ்க்கை துணைக்கும் இடையே மண வாழ்க்கை பொருத்தம் எப்படி இருக்கும்?

அவர்கள் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் என்னவாக இருக்கும்? என்பதை நாம் அறிந்துக் கொள்ள முடியும்.
வயது வித்தியாசம்
சூரியன், உங்கள் ஜாதகத்தின் 7-வது வீட்டில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், உங்கள் துணை உங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஒரு நபராக இருப்பார். இருவருக்கும் இடையே 1 முதல் 2 வயது வித்தியாசம் காணப்படலாம்.
சந்திரனின் தாக்கம் உங்கள் ஜாதகத்தின் 7-வது கட்டத்தில் பிரதிபலித்தால், அளவு கடந்த அன்பை வெளிப்படுத்தும் ஒரு நபரை நீங்கள் வாழ்க்கை துணையாக பெறுவீர்கள். 1 - 2 வயது இடைவெளி இருக்கலாம்.
7-வது வீட்டில் செவ்வாய் கிரகம் ஆதிக்கம் செலுத்த, 2 - 3 வயது வித்தியாசத்தில் உங்களுக்கான வாழ்க்கை துணை கிடைப்பார். குரு பகவான், உங்கள் ஜாதகத்தில் 7-வது வீட்டில் ஆதிக்கம் செலுத்த 2 - 3 வயது இடைவெளி இருக்கும்.
சுக்கிரன் கிரகத்தின் தாக்கத்தை கொண்டிருக்கும் நபர்கள், தங்கள் வயதுக்கு நிகரான ஒரு நபரையே வாழ்க்கை துணையாக ஏற்பார்கள். அதும், காதல் திருமணத்தை செய்வதற்கான வாய்ப்பு அதிகம்.
சனி பகவான், மற்ற கிரகங்களை காட்டிலும் அதிக இடைவெளியில் (4 - 5 வயது இடைவெளியில்) உங்களுக்கான வாழ்க்கை துணையை கொண்டு வருவார்.
புதன் கிரக தாக்கம் உடையவர்கள் 0 - 1 வயது இடைவெளி காணப்படும். திருமணம் பெரும்பாலும் காதல் திருமணமாக முடியும்.
ராகு ஆதிக்கம் செலுத்த, 2 - 3 வயது இடைவெளி இருக்கலாம்.
கேதுவின் ஆதிக்கம் எதிர்மறையான மாற்றங்களை கொண்டு வரும். 3 - 4 வயது இடைவெளி இருக்கலாம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.