மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது ஏன் தெரியுமா?
மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் சொக்கநாதரும் ,மதுரை மல்லிகை பூவும் ,இதற்கு மேலாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு தான் எல்லோருக்கும் நினைவில் வரும்.
மதுரை அரசி மீனாட்சிக்கு இன்று ஏப்ரல் 21 கல்யாண சுந்தரேஸ்வருடன் வெகு விமர்சையாக திருமணம் நடந்து முடிந்தது.அதன் பிறகு நாளை தேரோட்டம் நடைபெறும்
.அதன் மறுநாள் மதுரையே ஆவலுடன் எதிர் பார்த்து கொண்டாட காத்திருக்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.அந்த விழாவிற்காக மதுரை மட்டும் அல்லாமல் பல மாவட்டங்களில் இருந்து மக்கள் வந்து கலந்து கொள்ள ஆவலுடன் இருக்கின்றனர்.
அதாவது ஏப்ரல் 23 சித்ரா பௌர்ணமி தினத்தில் தான் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறும்.
சித்ரா பௌர்ணமி அன்று வானில் முழு நிலவு ஒளிர மக்கள் கூட்டம் கூட்டமாக கள்ளழகரை பார்க்க வருவார்கள்.
அழகர் மலையில் இருந்து புறப்பட்டு மதுரை வந்த ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து விட்டு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுத்து, மீண்டும் அழகர் மலைக்கு திரும்பும் வரை "அழகர் எங்கே இருக்கிறார்?என்பதே சித்திரை திருவிழாவின் முக்கிய கேள்வியாக இருக்கும்.
அழகர் தன் தங்கை மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும் திருமணம் நடக்கும் செய்தி கேள்விபட்டு, ஸ்ரீ அழகர்,கள்ளழகர் கோலத்துடன் மதுரை நோக்கி ஆவலுடன் வந்துகொண்டு இருந்தார்.
வரும் வழியில்,எங்கும் பக்தர்கள் காட்சி கொடுத்து கொண்டு இருந்ததால் தங்கையின் திருமணம் காண முடியாமல் சோகத்தில் வைகையில் எழுந்தருளுகிறார் என்கிறது புராணங்கள்.
அந்த வைபவம் தான் அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு. அப்படியாக மதுரையின் அடையாளமாக அவ்விழா வெகு விமர்சையாக நடைபெறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |