கள்ளழகருக்கு அணிவிக்கும் ஆடையில் ஒளிந்திருக்கும் ரகசியம்
மதுரையில் சித்திரை மாதம் என்றாலே கொண்டாட்டம் தான்.மீனாட்சி அம்மன் திருமணம்,தேரோட்டம்,அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் என சித்திரை மாதத்தில் நிறைய தெய்விக விஷேசங்கள் நடைபெறும்.
அதில் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அம்மா மீனாட்சி திருக்கல்யாண வைபவம் முடிந்து அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வ்ருகை தந்து அழகர் ஆற்றில் இறங்கும் காட்சியை பார்க்க எதிர்பார்ப்போடு இருக்கின்றனர்.
அப்படியாக அழகருக்கு ஆடை அணிவிப்பதில் பல விஷேசங்கள் ரசிகியங்கள் இருக்கிறது.அதாவது அழகருக்கான ஆடை ஆபரணங்கள் அனைத்தையும் ஒரு பெரிய மரப்பெட்டியில் வைத்திருப்பார்கள்
இந்தப் பெட்டிகளில் சிவப்பு,வெள்ளை,பச்சை,மஞ்சள்,ஊதா என பல வண்ணங்களில் பட்டுபுடவைகள் இருக்கும்.
கோயிலின் தலைமை பட்டர் அந்தப் பெட்டிக்குள் ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த நிற வண்ண புடவை இருக்கிறதோ அந்த புடவை தான் அழகர் ஆற்றில் இறங்கும் பொழுது அணிவிக்கப்படும்.
அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும் என்கின்றனர்.
வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும்.
இப்படி நம்பிக்கை இருப்பதால் 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
கடந்த சில ஆண்டுகளாகவே பச்சைப் பட்டுதான் உடுத்திதான் ஆற்றில் இறங்குகிறார் நம் கள்ளழகர். அதே போல் மக்கள் இந்த வருடம் அழகர் எந்த நிற புடவை கட்டி ஆற்றில் இறங்குவர் என ஆவலுடன் காத்துகொண்டு இருக்கின்றார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |