தீரா நோய்களை குணமடைய செய்யும் அழியா இலங்கை அம்மன்

By Sakthi Raj Apr 23, 2024 10:16 AM GMT
Report

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அமைந்துள்ளது அழியா இலங்கை அம்மன் ஆலயம்.இக்கோயிலுக்கு செல்ல தீராத நோய்களும் நிவர்த்தி ஆகும் என்று சொல்கின்றனர்.

மேலும் இக்கோயிலின் தனி சிறப்பு என்னவென்றால்ன் இக்கோயிலின் கருவறை புற்று வடிவில் அமைந்து இருப்பது தான்.

தீரா நோய்களை குணமடைய செய்யும் அழியா இலங்கை அம்மன் | Aliyailangaiamman Rasipuram Nammakal Pariarangal

மேலும் இக்கோயிலின் தல வரலாறு மிக சிறப்பு வாய்ந்தது .

அதாவது சீதையைத் தேடி அனுமன் இலங்கைக்கு சென்ற சமயம் வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற இலங்கை அம்மன் அனுமனை தடுத்தால், அதனால் அனுமன் தன் வாலினால் இலங்கை அம்மனை கட்டி சுருட்டி வீச அங்கிருந்து குலவேலம்பட்டி புதூர் ஆகிய இங்கு வந்து தலைகீழ விழுந்துவிட்டால்.

வீட்டில் இருக்கும் பூஜை அறையை பராமரிப்பது எப்படி?

வீட்டில் இருக்கும் பூஜை அறையை பராமரிப்பது எப்படி?


அதனால் இங்கே தெய்வத்தின் பாதங்களே வழிபடுகிறார்கள். இலங்கை அழிவதற்கு முன்பே இங்கு வந்து சேர்ந்துதால் அழியாத இலங்கை அம்மன் என அழைக்கப்படுகிறார் அனுமனுக்கு உரிய சிலை சிவனும் பார்வதியும் இணைந்த அழகிய லிங்க வடிவில் அமைந்துள்ளது.

தீரா நோய்களை குணமடைய செய்யும் அழியா இலங்கை அம்மன் | Aliyailangaiamman Rasipuram Nammakal Pariarangal

இதனால் அழகிய லிங்க வடிவமான அம்மன் என அழைக்கப்பட்டு அதுவே மறுவி அழியா இலங்கை அம்மன் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

ஆரம்பத்தில் அந்த இடம் புதிரும் புல்வெளியுமாக மண்டி கடந்த இடத்தில் இருந்த புற்றில் மேச்சலுக்கு வந்த ஒரு மாடு மட்டும் இங்கு வந்து பாலை சொரிந்து விட்டு சென்றதாம்.

தீரா நோய்களை குணமடைய செய்யும் அழியா இலங்கை அம்மன் | Aliyailangaiamman Rasipuram Nammakal Pariarangal

மாடு சரியாக பால் கறக்கவில்லையே என சந்தைக்கப்பட்ட முதலாளி மாட்டை பின் தொடர்ந்து சென்று பார்த்த போது விஷயத்தை அறிந்து கொண்டார். அவர் கனவில் அம்மன் தோன்றி தன் வரலாற்றைக் கூற இங்கே பந்தல் போடப்பட்ட தொடங்கிய வழிபாடு வழி வழியாக வளர்ந்துள்ளது.

இப்புற்றில் தலைகீழாக வடக்கு நோக்கி நிற்கும் போது இரண்டு பாதங்களும் மேல்நோக்கி அமைந்திருக்கின்றன.பாதங்களின் விரல்கள் வடக்கு நோக்கி அமைந்துள்ளன.

திருவிழா காலங்களில் மட்டும் இருபாதத்தின் மீது உருவச்சிலை ஒன்று வைக்கப்பட்டு வழிபட்டுவருகின்றனர்.

மக்கள் நோய்கள் நெருங்காமல் இருக்க சிறிய பசு உருவங்களை உள்ள கோயில் பிரார்த்தனை செய்து வைத்தால் நோய்கள் குணமடையும் என்று நம்புகிறார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US