வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்டும் ஊதுபத்தி பரிகாரம்
நம்முடைய வாழ்க்கையில் கிரகங்கள் சரியான முறையில் அமைந்து இருந்தாலும் சமயங்களில் எதிர்மறை ஆற்றலும் மற்றவர்கள் நம் மீது கொண்டுள்ள போட்டி பொறாமையின் காரணமாக அவர்களின் எண்ண அலைகளும் நமக்கு காரிய தடங்கல் உண்டாகுவதை கவனிக்க முடியும்.
இதனால் பலரும் பல அவஸ்தைக்கு உள்ளாகுவதுண்டு.என்னதான் நம்முடைய வாழ்க்கை நிகழ்வுகளுக்கு கர்மவினைகள் தான் காரணம் என்று சொன்னாலும் சக மனிதரிகளின் கண் திருஷ்டி,ஏவல் பில்லி சூனியம் இவற்றால் நம் வாழ்க்கையே தலைகீழாக மாறக்கூடும்.
இந்த மாதிரியான சூழ்நிலையில் நாம் துன்ப படும் பொழுது நாம் செய்யவேண்டிய பரிகாரத்தை பற்றி பார்ப்போம். பொது வாழ்க்கையில் ஒருவர் சந்தோஷமாக வாழ்கின்றார் என்றார் அது நிச்சயமாக பலருக்கும் தொந்தரவாக இருக்கும்.அவர்கள் இவன் இவ்வளவு நன்றாக இருக்கிறானே என்ற மனக்குமுறல்,எதிர்தரப்பினரை சில சிக்கலில் நிற்கச்செய்து விடுகிறது.
அதுமட்டும் அல்லாமல் நம் மீது பொறாமை குணம் கொண்டவர்கள் கட்டாயம் நம்முடைய நெருங்கிய சொந்தம் அல்லது நண்பர்களாகத்தான் இருக்க கூடும்.இவ்வளவு வஞ்சக நெஞ்சம் கொண்டவர்களின் பார்வை நம்மை அதிக அளவில் பாதிக்கும்.
இந்த மாதிரியான சுழலில் மாதத்தில் ஒரு நாள் வரக்கூடிய அமாவாசை மற்றும் வாராவாரம் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை இந்த இரண்டு நாட்களில் நம்மை சுற்றி உள்ள தீய சக்திகள் மட்டும் எதிர்மறை ஆற்றல் விலகக்கூடிய பரிகாரத்தை செய்யவேண்டும்.அந்த வகையில் மிகவும் எளிதான பரிகாரம் பற்றி பார்ப்போம்.
நாம் மாதத்தில் ஒரு நாள் கட்டாயம் குளிக்கும் பொழுது தண்ணீரில் கல் உப்பு போட்டு குளிப்பது நம் மீது பிறர் கொண்ட தீய எண்ணங்கள்,கண் திருஷ்டி விலக்கும்.
அதே போல் வீட்டில் உள்ள தீய சக்திகளை விரட்ட வீட்டில் உள்ள ஊதுபதிகளை எடுத்து கொண்டு அதை பற்ற வைத்துக்கொண்டு வீடு முழுவதும் காட்ட வேண்டும்.மேலும் வீட்டில் உள்ள எல்லா அறைகளுக்கு சென்று வீட்டில் உள்ள மூலைகளில் காண்பிக்க வேண்டும்.
பொதுவாக எதிர்மறை சக்திகள் வீட்டின் மூலையில் தான் வாசம் செய்யும்.ஆதலால் கட்டாயம் நாம் வீட்டின் அனைத்து அறைகளில் உள்ள மூலைகளில் காண்பிப்பது மிகவும் அவசியம்.மேலும் இந்த பரிகாரத்தை யார் வேண்டமானாலும் செய்யலாம்.
இப்படி ஒவ்வொரு வாரமும் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று நாம் இந்த பரிகாரத்தை செய்யலாம். நாம் எந்த ஒரு காரியத்தையும் மனதார நம்பி செயல் பட நாம் நிச்சயம் அதற்கான பலனை பெற முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |