இரவில் மட்டும் நடைதிறக்கும் சக்திவாய்ந்த கோயில்

By Sakthi Raj Apr 15, 2024 09:06 AM GMT
Report

பொதுவாக கோயில் என்றால் காலையில் திறந்து மாலையில் நடை சாத்தப்படும்.ஆனால் மதுரை மாவட்டம் சுப்புலாபுரம் அருகில் உள்ள சில்லார்பட்டி என்ற கிராமத்தில் கால தேவி என்னும் அம்மன் கோயில் உள்ளது, இந்த கோயிலில் என்ன விஷேசம் என்றால் பிற கோயில்கள் போல் அல்லாமல் சூரியன் மறைந்து திறக்கபடும் கோயில் பிறகு சூரிய உதயத்திற்கு பிறகு தான் மூடப்படும்.

இரவில் மட்டும் நடைதிறக்கும் சக்திவாய்ந்த கோயில் | Amman Vazhipadu Madurai Sivagangai Temple

உலகிலே இரவு முழுவதும் நடைதிறந்திருக்கும் கோயில் இது தான். இந்த கோயில் பௌர்ணமி அம்மாவாசை நாளில் அதிக விஷேசம் என்பதால் அன்று கூட்டம் ஜாஸ்தியாக இருக்கும்.

சர்ப்ப தோஷம் விலக செய்யவேண்டிய பரிகாரங்கள்

சர்ப்ப தோஷம் விலக செய்யவேண்டிய பரிகாரங்கள்


பொதுவாக, ஒருவரின் நல்ல மட்டும் கெட்ட நேரங்களை தீர்மானிப்பது அவருடைய ராசி மற்றும் நட்சத்திரங்கள். இந்தக் கோயிலில் 27 நட்சத்திரங்கள் 9 நவகிரகங்கள் மற்றும் 12 ராசிகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறார். இந்த கோயிலின் மூலவர் தெய்வமான கால தேவி அம்மன். கோயில் கோபுரத்திலேயே 'நேரமே உலகம்' என்று பொறிக்கப்பட்டிருக்கின்றது.

இரவில் மட்டும் நடைதிறக்கும் சக்திவாய்ந்த கோயில் | Amman Vazhipadu Madurai Sivagangai Temple

அதாவது, ஒருவருடைய வாழ்வுக்கும் தாழ்வுக்கும் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அவருடைய நேரம்தான் வழி வகுக்கிறது என்பதை சொல்கிறது இந்த வாசகம். நேரம் சரியில்லை என்று ஜோதிடர்கள் சொன்னால் அதற்கான பரிகாரத்தில் மக்கள் செய்வார்கள்.

  அப்படியாக இந்த கால தேவி அம்மன் கோயிலில் வந்து வழிபாடு செய்தால் கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இரவில் மட்டும் நடைதிறக்கும் சக்திவாய்ந்த கோயில் | Amman Vazhipadu Madurai Sivagangai Temple

கோயிலை  11 சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் கெட்ட நேரம் அகன்று, நல்ல நேரம் வரும் என்பது மக்களின் தீராத நம்பிக்கையாக இருக்கிறது.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US