இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (22/04/2024)
மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்
மேஷம்
தொழிலில் இருந்த போட்டியாளர்கள் விலகிச்செல்வார்கள். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். உங்கள் செயல் ஆதாயத்தை உண்டாக்கும். வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும்.இழுபறியாக இருந்த வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும்.நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
ரிஷபம்
சொத்து வாங்க மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும்.குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.நேற்றுவரை நிறைவேறாமல் இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும்.
மிதுனம்
வியாபாரத்தை விருத்தி செய்வதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி ஆதாயத்தை உண்டாக்கும். உங்கள் முயற்சியின் வழியே பலன் அடைவீர்கள். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். செயல்களில் லாபம் காண்பதற்காக நண்பர்களை அரவணைத்துச் செல்வீர்கள்.
கடகம்
துணிச்சலுடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள். ஆதாயம் அதிகரிக்கும். பொதுநல முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள். முடிவு உங்களுக்கு சாதகமாகும். பாராட்டிற்கு ஆளாவீர்கள்.சகோதரர்கள் உதவியுடன் ஒரு செயலில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள். வழக்கில் வெற்றி காண்பீர்கள்.
சிம்மம்
கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள். நிதிநிலை உயரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.
கன்னி
வருமானத்தை அதிகரிப்பதற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி இழுபறியாகும்.நினைத்தவற்றை இன்று அடைவீர்கள். வெளியூர் பயணத்தில் ஆதாயம் உண்டாகும். தடைபட்டிருந்த வருவாய் வந்துசேரும். தொழிலை விரிவு செய்வீர்கள்.
துலாம்
வெளியூர் பயணத்தினால் அலைச்சல் அதிகரிக்கும். முயற்சிகள் தாமதமாகும். விரும்பிய செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர்கள். குடும்பத்திற்காக திடீர் செலவுகள் தோன்றும். அதை போராடி சமாளிப்பீர்கள்.
விருச்சிகம்
வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். சுயதொழில் செய்து வருபவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் முயற்சி ஒன்று நிறைவேறும்.வழக்கமான செயல்களில் ஆதாயம் காண்பீர்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகும்.
தனுசு
வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். பழைய கடன்களை அடைப்பீர்கள்.வழக்கமான வருமானம் தடையின்றி வரும். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரிகள் தங்கள் தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தினால் லாபம் அதிகரிக்கும்.
மகரம்
நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த செயல் இன்று நிறைவேறும். ஆதாயம் அதிகரிக்கும். எந்த ஒன்றிலும் யோசித்து செயல்படுவது நல்லது. அரசு வழியில் உண்டான நெருக்கடி நீங்கும். பெரியோரின் ஆதரவு உண்டாகும். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.
கும்பம்
உடல்நிலையில் சில சங்கடங்கள் தோன்றும். புதிய முயற்சிகள் இன்று வேண்டாம்.வெளியூர் பயணங்களில் விழிப்புணர்வு தேவை. உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று ஏமாற்றத்தில் முடியும். முயற்சிகளில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். யாருக்கும் ஜாமீன் நிற்க வேண்டாம்.
மீனம்
உங்கள் எதிர்பார்ப்புகள் இன்று பூர்த்தியாகும். நண்பர்கள் ஒத்துழைப்பால் செயல்கள் லாபமாகும். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் மீண்டும் தேடி வருவார்கள். அலுவலக பிரச்னை தீரும். தடைபட்டிருந்த முயற்சிகள் இன்று நிறைவேறும். நண்பர்கள் உதவியால் உங்கள் செயல் லாபமாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |