நாளை(23-04-2025) வாஸ்து நாள் அன்று தோஷம் விலக செய்யவேண்டியவை

By Sakthi Raj Apr 22, 2025 12:05 PM GMT
Report

 ஜோதிடத்தில் வாஸ்து என்பது மிக முக்கியமானவை. காரணம், வாஸ்து நம்முடைய உடல் நிலை, எண்ணங்கள், மற்றும் பொருளாதாரத்தில் பங்கு கொள்கிறது. நாம் இருக்கும் இடம் வாஸ்து குறைபாட்டோடு இருந்தால் அங்கு எதிர்பாராத சிக்கல்களை சந்திக்கக்கூடும்.

கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் இழந்து நிற்கும் சூழல் கூட உண்டாகலாம். அவ்வாறு வாஸ்து பிரச்சனையில் இருப்பவர்கள் செய்ய வேண்டிய வழிபாட்டை பார்ப்போம்.

சித்திரை மாதம் வாஸ்து பகவான் கண் விழிக்கக்கூடிய வாஸ்து நாள் அன்று, நாம் சந்திக்கும் தீராத வாஸ்து பிரச்சனைகள் தீர வாஸ்து பகவானை வழிபாடு செய்தால் எப்பேர்ப்பட்ட தடைகளும் விலகும். நாளை (23-4-2025) புதன்கிழமையோடு சேர்ந்து வாஸ்து நாள் வருகிறது. இந்த நாளில் அதிகாலை எழுந்து குளித்து பூஜை செய்யவேண்டும்.

நாளை(23-04-2025) வாஸ்து நாள் அன்று தோஷம் விலக செய்யவேண்டியவை | April 23 Vaastu Day Worship And Benefits

வாஸ்து நாள் அன்று நாம் வழிபாடு செய்ய நமக்கு ஒரு செங்கல் மிக மிக முக்கியம். அதற்காக ஒரு புதிய செங்கல் வாங்கி கொள்வது நல்லது. ஏற்கனவே நீங்கள் செங்கல் வைத்து பூஜை செய்கிறீர்கள் என்றால், அந்த பழைய செங்கலை பூஜைக்கு பயன்படுத்தலாம்.

அந்த செங்கல்லை நன்றாக கழுவி அதன் மேலே மஞ்சள் தடவி, சிவப்பு நிற குங்குமத்தால் அந்த தடவிய மஞ்சளுக்கு மேலே ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து கொள்ளவேண்டும். பிறகு அந்த செங்கலை பூஜையறையில் ஒரு தட்டின் மேல் அல்லது மனப்பலகையின் மீது வைத்து பூக்கள் போட்டு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

உங்கள் ஜாதகத்தில் சனி எந்த கட்டத்தில் இருக்கிறார்? அதன் பலனை தெரிந்து கொள்ளுங்கள்

உங்கள் ஜாதகத்தில் சனி எந்த கட்டத்தில் இருக்கிறார்? அதன் பலனை தெரிந்து கொள்ளுங்கள்

பிறகு அந்த செங்கல் முன் மண் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பிறகு கொஞ்சம் உதிரி புஷ்பங்களை கையில் எடுத்து அந்த செங்கலுக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர ஆரத்தி காண்பித்து வாஸ்து பகவானுக்குரிய இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி வழிபாடு செய்யலாம்.

இந்த வழிபாட்டை நாளை காலை 8:00 மணி முதல் 9:00 மணி வரை செய்ய முடிந்தவர்கள் செய்யலாம். முடியாதவர்கள் நாளைய தினம் இரவு எட்டு மணிக்கு முன்பு செய்ய வேண்டும்.

நாளை(23-04-2025) வாஸ்து நாள் அன்று தோஷம் விலக செய்யவேண்டியவை | April 23 Vaastu Day Worship And Benefits

மந்திரம்:

ஓம் வாஸ்து பகவானே நமோ நமஹ !
ஓம் கிரக லட்சுமியே நமோ நமஹ !

இந்த பூஜையை செய்பவர்களுக்கு வீட்டில் எப்பேர்ப்பட்ட வாஸ்து தோஷம் இருந்தாலும் விலகும் என்பது நம்பிக்கை. மேலும், வாஸ்துவால் உண்டாகும் துன்பம் அனைத்தும் விலகி நேர்மறை சிந்தனைகள் பெருகும்.

இந்த வழிபாட்டை மேற்கொண்ட பிறகு, மூன்று நாள் கழித்து செங்கலை சுத்தம் செய்து பத்திரமாக பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்துக்கொள்வது நல்லது. பிறகு அடுத்த மாதம் வாஸ்து நாள் வரும் பொழுது மீண்டும் அந்த செங்கல் கொண்டு பூஜை செய்யவேண்டும்.   

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US