இன்றைய ராசி பலன்(08-04-2025)
மேஷம்:
இன்று புத்தி கூர்மையுடன் செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். நெருங்கிய நண்பர்களுடன் நேரம் செலவழித்து மகிழ்ச்சி அடைவீர்கள். பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவீர்கள்.
ரிஷபம்:
இன்று குடும்ப உறுப்பினரை அனுசரித்து செல்ல வேண்டும். தேவை இல்லாத பிரச்சனைகள் உங்களை தேடி வரலாம். வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும். கவனமாக இருக்க வேண்டிய நாள்.
மிதுனம்:
வியாபாரத்தில் உண்டான தடைகள் விலகும். நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். உறவினர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள். பல நாள் பிரச்சனை சுமுகமாக முடிவு பெரும்.
கடகம்:
இன்று உடல் அசதி ஏற்படும். பிள்ளைகளுடன் உங்கள் பொன்னான நேரத்தை செலவிடுவார்கள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கலாம். மகிழ்ச்சியான நாள்.
சிம்மம்:
வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். மதியத்திற்கு மேல் உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். வழிபாட்டால் மனம் தெளிவடையும். தேவைக்கேற்ற பணம் வரும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும்.
கன்னி:
உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். வேலைக்காக சென்ற பயணம் நல்ல படியாக முடிவு பெரும். வாழ்க்கை துணையின் ஆலோசனை பெறுவீர்கள்.
துலாம்:
இன்று முழு இறைவழிபாட்டில் ஈடுபடுவீர்கள். எதையும் ஒருமுறைக்கு பல முறை யோசித்து பேசுவது நன்மை தரும். உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மன அமைதி காக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்:
எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். கேட்ட இடத்தில் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
தனுசு:
மனதில் சில சங்கடங்கள் அதிகரிக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். தாய் வழி உறவால் உங்ககளுக்கு ஆதாயம் உண்டாகும். இறை வழிபாடு மன அமைதி கொடுக்கும்.
மகரம்:
நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். கூட்டுத் தொழிலில் பிரச்னை தோன்றி விலகும். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். குடும்பத்தினர் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்.
கும்பம்:
போட்டியாளர்களால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்கள் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் வேலைகள் நடந்தேறும்.
மீனம்:
குடும்பத்தில் உண்டான பிரச்சனைகள் ஒரு நல்ல முடிவு பெரும். நீங்கள் எதிர்பாராத இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். மனதில் உற்சாகம் பெருகும். பிள்ளைகளால் ஆதாயம் பெறுவீர்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |