இன்றைய ராசி பலன்(10-04-2025)

Report

மேஷம்:

இன்று முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நினைத்ததை சாதிக்கும் திறன் அமையும். வியாபாரத்தில் உண்டான சவால்களை எளிதாக சமாளிப்பீர்கள். சந்தோஷமான நாள்.

ரிஷபம்:

ஒரு சிலருக்கு காலையில் இருந்து மனம் குழப்பமாக காணப்படும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உருவாகும். தாய் தந்தையிடம் கவனமாக பேச வேண்டும். துணிச்சலான நாள்.

மிதுனம்:

இன்று வேலையில் கவன சிதறல் உண்டாகும். மனதை ஒருநிலை படுத்த தியானம் செய்யலாம். வீட்டில் சில குழப்பங்கள் உண்டாகும். ஒன்றுக்கும் மேற்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள்.

கடகம்:

இன்று மனதில் சில பதட்டமும் சந்தோஷமும் உண்டாகும். வெளியில் செல்லும் பொழுது விலையுர்ந்த பொருட்களில் கவனமாக இருக்க வேண்டும். இறைவழிபாடு நன்மை தரும்.

சிம்மம்:

நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். வேலையில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

கன்னி:

வீட்டில் சுப நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சுக்கள் எடுப்பீர்கள். வேலையில் சிறந்து விளங்குவீர்கள். சிலருக்கு மூன்றாம் நபரால் சில சங்கடம் உண்டாகலாம். தைரியமாக எதிர்கொள்ளும் நாள்.

2025 அனுமன் ஜெயந்தி எப்பொழுது? அன்று செய்யவேண்டிய முக்கிய வழிபாடு

2025 அனுமன் ஜெயந்தி எப்பொழுது? அன்று செய்யவேண்டிய முக்கிய வழிபாடு

துலாம்:

மனதில் தெளிவு பிறக்கும். உங்கள் மதிப்பு உயரும். வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிலருக்கு மதியம் மேல் நற்செய்தி வந்து சேரும். மனதில் இறை சிந்தனை அதிகரிக்கும்.

விருச்சிகம்:

உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முதலீடு செய்வதற்கு முன் நன்றாக யோசிக்கவும். பிறரால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக முடிப்பீர். நினைப்பது நடந்தேறும்.

தனுசு:

பிறரிடம் தற்பெருமை பேசுவதை தவிர்க்க வேண்டும். வீண் அலைச்சல் உண்டாகலாம். எதையும் நிதானமாக யோசித்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். அமைதி காக்க வேண்டிய நாள்.

மகரம்:

சந்திராஷ்டமம் தொடர்வதால் செயல்களில் சங்கடம் தோன்றும். எதிர்ப்பு வலுக்கும். பயணத்தில் கவனம் தேவை. அவசர வேலையால் குழப்பமடைவீர். மருத்துவச் செலவு ஏற்படும்.

கும்பம்:

சகபணியாளர்களை அனுசரித்துச் சென்று ஆதாயம் அடைவீர். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். நட்பு வட்டம் விரியும்.

மீனம்: 

பணியிடத்தில் உண்டான பிரச்சனைகள் நல்ல முடிவிற்கு வரும். ஒரு சிலருக்கு புதிய நபரின் அறிமுகத்தால் நல்ல ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணம் சாதகமாக அமையும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US