இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? (21/04/2024)

By Sakthi Raj Apr 21, 2024 03:18 AM GMT
Report

மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்

மேஷம்

துணிவுடன் செயல் படக்கூடிய நாள்.சுபநிகழ்ச்சிகளில் பங்குகொள்வீர்கள்.எண்ணிய காரியம் நிறைவேறும்.வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகி செல்வார்கள்.உங்கள் முயற்சிகளில் ஆதாயம் உண்டு.

ரிஷபம்

மற்றவர்கள் பலம் பலவீனம் தெரிந்து அதற்கு ஏற்றார் போல் செயல்படுவீர்கள்.பூர்வீக சொத்தில் உண்டான பிரச்சனை முடிவிற்கு வரும்.பழைய செயல் ஒன்றில் லாபம் உண்டாகும்.எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.

மிதுனம்

நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகும். வியாபார முயற்சிகளில் வெற்றிகள் உண்டாகும். உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். வெளியூர் பயணம் லாபமாக அமையும்.உறவுகளிடம் உங்கள் செல்வாக்கு உயரும்.

கடகம்

நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். செயலில் கூடுதல் கவனம் தேவை தொழிலில் இருந்த தடைகள் விலகும் சிந்தித்து செயல்படுவீர்கள் சொத்து விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் தீர்வுக்கு வரும்.

 சிம்மம்

குடும்பத்திலிருந்து நெருக்கடி விலகும் வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை முடிவிற்கு கொண்டு வருவீர்கள்.எதிர்பார்த்த வருவாய் உங்களை வந்து சேரும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்து ஆதாயம் வரும் .உங்கள் முயற்சி லாபத்தை உண்டாக்கும்.

சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வணங்கினால் குறையும் நம் பாவங்கள்

சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வணங்கினால் குறையும் நம் பாவங்கள்


கன்னி

தொழிலில் உண்டான பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். சுப நிகழ்ச்சியில் பங்கேற்பீர்கள். சிலர் குடும்பத்தினருடன் கோவில் வழிபாட்டிற்கு சென்று வழிபடுவீர்கள். முயற்சிகள் இருந்த தடைகள் விலகும். அன்னியர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

துலாம்

வாழ்க்கை துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். வாகனத்தால் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். இனம் புரியாத குழப்ப மனதில் உண்டாகும். உங்கள் முயற்சியில் இழுபறியாகும் .தொழிலில் உண்டான நெருக்கடிகள் தீரும்.

விருச்சிகம்

விரும்பியதை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் துணையுடன் முயற்சிகள் வெற்றி காண்பீர்கள்.இழுபறியாக இருந்த செயல்கள் இன்று நிறைவேறும். எதிர்பார்த்து வரவு உங்களை வந்து சேரும்.

தனுசு

திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல வரன் அமையும். தொழிலில் உண்டான நஷ்ட நிலைக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் அணுகுமுறை ஆதாயத்தை ஏற்படுத்தும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.

மகரம்

பணப்புழக்கம் அதிகரிக்கும். தந்தை வழி உறவுகளின் உதவியால் உங்கள் செயல்கள் நிறைவேறும். தடைகளை விலகி முயற்சியில் வெற்றி காண்பீர்கள். வியாபாரத்தில் ஆதாயம் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்படுவீர்கள் .தொழிலில் அக்கறை அதிகரிக்கும் .நீண்ட நாள் முயற்சி நிறைவேறும்.

கும்பம்

பழைய பிரச்சினை ஒன்று மீண்டும் தலை எடுக்கும் ஆதலால் சிந்தித்து செயல்படுவீர்கள். முயற்சிகளில் எதிர்பார்த்த நன்மையை அடைய முடியாமல் போகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும். உங்களை சங்கடப்படுத்தும் வகையில் சில செயல்கள் இன்று நடந்தேறும். அனைத்திலும் கவனம் அவசியம்.

மீனம்

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். தடைப்பட்டிருந்த முயற்சி நண்பர்கள் உதவியுடன் நடந்தேறும். எதிர்பார்ப்புகள் எளிதாக நிறைவேறும். குடும்பத்தினர் உதவியால் உங்கள் விருப்பம் நிறைவேறும். எதிர்பார்த்த வரவு உங்களை வந்து சேரும் .வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US