சோழரின் மனைவியால் கட்டப்பட்ட சிவன் கோயில்
தமிழ்நாடு ஒரு ஆன்மீக பூமி என்று தான் சொல்லவேண்டும்.இங்கு எல்லா மாவட்டங்களிலும் கண்டிப்பாக பழமைவாய்ந்த பல சிறப்புக்கள் கொண்ட அற்புத கோயில்கள் இருக்கும்.
மேலும் அந்த கோயில்கள் கட்டியதற்கு பின்னாலும் ஒவ்வொரு சிறப்பம்சங்கள் இருக்கும். அப்படியாக,முன்னோரு காலத்தில் தமிழ்நாட்டில் என்னதான் சேர சோழ பாண்டியர்கள் ஆட்சி நடந்து சண்டையிட்டு கொண்டு இருந்தாலும் அவர்கள் யாரும் கோயில் கட்டுவதையும்.ஆன்மீகத்தையும் விட்டு கொடுத்தது இல்லை.
அவர்களின் ஆன்மீக ஈடுபாட்டால் தான் இன்று தமிழ் நாட்டில் எங்கும் காணக்கிடைக்காத பல கலைநயம் கொண்ட கோவில்களை நம்மால் தரிசிக்க முடிகிறது.
அப்படியாக 900 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மாமன்னர் கண்டராதித்ய சோழனின் மனைவி செம்பியன் மாதேவியரால் கட்ட பட்ட அற்புதம் வாய்ந்த அருள்மிகு கைலாசநாதர் கோயில் ஒன்று அரியலூர் மாவட்டத்தில் இருக்கிறது.அதை பற்றி பார்ப்போம்.
இத்திருக்கோயிலில் என்ன விஷேசம் என்னவென்றால் இங்கு சுவாமியையும் அம்பாளையும் ஒரே இடத்தில இருந்து தரிசனம் செய்யமுடியும்.
இக்கோயில் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு நோக்கிய கோயில் ஆகும். தெற்கு நுழைவு வாயிலில் 3 நிலை ராஜகோபுரம் உள்ளது.
கிழக்குப் பகுதியில் உள்ள நுழைவு வாயில் ராஜகோபுரம் ஏதுமின்றி, இந்த கோயிலில் 2 பிரகாரங்கள் உள்ளன. சன்னதியில் கைலாசநாதர் லிங்க வடிவிலும், காமாக்ஷி தனி சன்னதியிலும் வீற்றிருக்கிறார்கள். விநாயகர், சோமாஸ்கந்தர், நடராஜர், வள்ளி, தெய்வயானையுடன் முருகன், சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி, காசி விஸ்வநாதர், வைத்தியநாதர் ஆகிய மூவருக்கும் தனித்தனி உபசன்னதிகள் உள்ளன.
இவ்வூர் 750 ஆண்டுகள் பழைமையானது என பெண்ணாடம் பிரன வசாலேஸ்வரர் திருக்கோவில் கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது.இத்திருக்கோவிலுக்கு ஸ்ரீ குமார ஒப்பில்லாத மழவராயர் எனற பாளையக்காரர் நில தானம் கொடுத்துள்ளார் இவூர் பாளையக்காரர் காலத்தில் திருமாநல்லூர் எனவும் ஆங்கிலேயர் காபெருவிழா பஞ்ச மூர்த்தி புறப்படுடன் சிறப்பாக நடைபெறும்.
ஒருவர் வாழ்க்கையில் செல்வம் பெருகி நன்மை பெற அமாவாசை தோறும் அபிஷேகம் செய்து வழிபட நாம் வாழ்க்கையில் பண தட்டுப்பாடு இன்றி வாழலாம் என்பது நம்பிக்கை.
மேலும் நாக தோஷம் இருப்பவர்கள் இங்கு உள்ள தெட்சிணாமூர்த்தியை வழிபட நாக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |