இந்த கோவிலில் பக்தர்கள் தான் அபிஷேகம் செய்ய வேண்டுமாம்- எங்கு தெரியுமா?
அரியலூர் மாவட்டம் அரண்மனைக் குறிச்சி கிராமத்தில் அமைந்திருக்கிறது தில்லை காளியம்மன் கோவில். இங்கு மற்ற கோவில்களில் இல்லாத முக்கியமான வழிபாட்டு முறை இந்த கோவிலில் கடைபிடித்து வருவதால் பக்தர்களின் கவனத்தை இந்த கோவில் பெற்றுள்ளது.
இந்த கோவிலில் நவகிரகங்களில் நிழல் கிரகமாக விளங்கக்கூடிய ராகு கேது தொடர்பான சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. முக்கியமாக ராகுவும் கேதுவும் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார்கள்.
அதனால் ஒருவருக்கு ஜாதகத்தில் திருமணத்தால் ஏற்படக்கூடிய தோஷங்கள் மற்றும் தடைகள் யாவும் இருந்தால் இந்த ஆலயம் சென்று வழிபாடு செய்தால் விலகும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

அது மட்டுமல்லாமல் ராகு கேது தோஷம் உள்ளவர்கள் அவர்களுடைய கைகளாலே ராகு மற்றும் கேது பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வருவது இந்த கோவிலின் விசேஷமாகவும் வழக்கமாகவும் இருந்து வருகிறது.
ஒருவருக்கு ஆரோக்கிய ரீதியாக சந்திக்கும் உடல்நல குறைபாடுகள் காரணமாகவும் பக்தர்கள் இங்கு வந்து ராகு கேதுவிற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்து வருகிறார்கள். இந்த கோவிலில் பிற கோவில்களை போல் பூசாரிகள் நேரடியாக அபிஷேகம் செய்வதில்லை.
பக்தர்கள் அவர்களே அபிஷேகம் செய்து வழிபாடு செய்கிறார்கள். அவர்களை பூசாரிகள் வழி நடத்துகிறார்கள். இவ்வாறு வழிபாடு செய்வதால் இங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு மன அமைதியும் ஆன்ம திருப்தியும் கிடைப்பதாக சொல்கிறார்கள்.

இதன் காரணமாகவே இந்த கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து அவர்களுடைய வழிபாட்டை மேற்கொள்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக திருமணமே ஆகாது என்று நிலையில் இருந்து வருபவர்கள் இந்த தில்லை காளியம்மன் ஆலயம் வந்து ராகு கேது கல்யாண கோலத்தை தரிசனம் செய்து வழிபாடு செய்யும்பொழுது அவர்களுக்கு விரைவில் எதிர்பார்த்த வரன் கிடைக்கிறது என்று பக்தர்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |