நாளை (14-08-2025) சுக்கிரன் உருவாக்கும் அர்த்தகேந்திர யோகம்- அதிர்ஷ்டம் பெரும் 3 ராசிகள்
ஜோதிடம் பொருத்தவரை ஒவ்வொரு கிரகங்களுடைய மாற்றம் தான் ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய நிகழ்வுகளுக்கான காரணமாக அமைகிறது. அந்த வகையில் மனிதர்களுடைய வாழ்க்கையில் சுகபோகங்களை கொடுக்கக்கூடிய சுக்கிர பகவான் உருவாக்கும் அர்த்த கேந்திர யோகம் மிக முக்கியமான யோகமாக பார்க்கப்படுகிறது.
அதாவது ஜோதிடத்தில் இரண்டு கிரகங்கள் ஒருவருக்கொருவர் நாற்பத்தி ஐந்து டிகிரி தொலைவில் அமைய பெரும் பொழுது எந்த அர்த்த கேந்திர யோகம் உருவாகிறது. இந்த யோகமானது நாளை 2025 ஆகஸ்ட் 14ஆம் தேதி உருவாக உள்ளது.
இதனால் ஜோதிடத்தில் 12 ராசிகளுக்கும் தாக்கங்கள் ஏற்பட்டாலும் இந்த அர்த்த கேந்திர யோகம் குறிப்பிட்டு சில ராசிகளுக்கு மிகப் பெரிய ராஜ யோகத்தை வழங்க உள்ளது. அவை எந்த ராசிகள் என்று பார்க்கலாம்.
கன்னி:
சமீப காலமாக மிகவும் மன வருத்தத்தில் இருக்கக்கூடிய கன்னி ராசிகளுக்கு அர்த்தகேந்திர யோகம் அவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும் மாறுதலையும் கொடுக்கப்போகிறது. வேலையில் முன்னேற்றம் குடும்பத்தில் மரியாதை என்று அவர்கள் வாழ்க்கை சூழல் மாறப்போகிறது. உயர் கல்விக்கான வாய்ப்புகளும் அதற்கான முயற்சியும் வெற்றியைத் தரும். இருந்தாலும் சில முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது குடும்ப ஆலோசனையை பெறுவது அவசியம் ஆகும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் அவர்கள் சொந்த வாழ்க்கையில் கடந்த சில நாட்களாக நிறைய அவமானங்களையும் வேதனைகளையும் சந்தித்து வருகிறார்கள். அந்த கஷ்டங்கள் எல்லாம் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி பெருக போகிறது. வழக்கு விஷயம் இவர்களுக்கு சாதகமாக அமையும். பெற்றோர்கள் இவர்கள் காதலை ஏற்றுக் கொள்வார்கள். குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்.
கும்பம்:
கும்ப ராசிக்கு அவர்கள் நீண்ட நாட்களாக வாழ்க்கையில் சந்தித்து வந்த தடைகள் விலகப் போகிறது. நடக்கவே நடக்காது என்று நினைத்த காரியங்கள் கூட அவர்களுக்கு இந்த காலகட்டத்தில் கைகூடும். திருமண வரன் இவர்கள் எதிர்பார்த்தது போல் அமையும். குடும்ப உறுப்பினர்கள் உங்களைப் புரிந்து நடந்து கொண்டு உங்கள் ஆசையை நிறைவேற்றுவார்கள். நண்பர்கள் மத்தியில் உங்களுக்கான நற்பெயர் கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







