இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(09/04/2024)
மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்று எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாள். தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள், பொருளாதார நிலை உயரும். காலையில் நீங்கள் எதிர்பார்த்த தகவல் உங்களை வந்து சேரும்.நெருக்கடிகள் குறைந்து வியாபாரத்தில் லாபம் அதிகரித்து வெற்றி பெறும் நாள்.ரிஷபம்
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்து ஆதாயம் இருக்காது. அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கக்கூடும். அலைச்சல்கள் செலவுகள் உண்டாகலாம். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் போகலாம். செயல்களில் பதற்றம் உண்டாகும் .வரவுக்கு மிஞ்சிய செலவுகளால் நெருக்கடகள் அதிகரிக்கும் நாள்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு இன்று நண்பர்கள் உதவியால் பிரச்சனை ஒன்று முடிவுக்கு வரும் .வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.பல நாள் தடைப்பட்டு இருந்த வருவாய் ஒன்று வந்து சேரும்.இன்று மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும் .வரவு அதிகரித்து எதிர்பாத்த தகவல்கள் உங்களை வந்து சேர்வதால் இன்றைய நாள் நல்ல நாளாக அமைக்கக்கூடும்
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்று வேலையில் இருந்த பிரச்சினை முடிவுக்கு வரும். தடைபட்டிருந்த செயல் நடந்தேறும் வழக்கு விவகாரம் சாதகமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செல்வாக்கு உயர்ந்து எதிர்பார்த்த வருமானம் வரும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று உங்கள் ஆற்றல் வெளிப்படும். திறமையுடன் செயல்பட்டு எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். நீண்ட நாள் இருந்த நெருக்கடி ஒன்று விலகும். உங்கள் முயற்சி வெற்றி கரமாகும்.நிதானத்துடன் செயல்பட்டு எதிர்பார்த்த நன்மைகள் அடைவீர்கள்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்று மனக்குழப்பம் அதிகரிக்கும். பணியாளர்கள் ஒரு சிலர் அதிகாரியின் கண்டிப்பிற்கு ஆளாக கூடலாம். நீங்கள் விரும்பாத செயல் நடக்க நேரிடும்.செய்யும் செயல் அனைத்திலும் விழிப்புணர்வு தேவை .இன்று நீங்கள் எதிர்பாத்த தகவல் வந்து சேரும். மனதில் நம்பிக்க்கை அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேற கூடிய நாள்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்று நண்பர்களால் செயலில் வெற்றி காண்பீர்கள் . எடுக்கும் முயற்சிகளில் லாபம் வந்தடையும். வெளியூர் பயணம் லாபத்தை உண்டாக்கும் செயல்களில் தெளிவு பிறக்கும் . வாழ்க்கை துணையின் ஆலோசனை பயன் தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று உடல் ஆரோக்கியம் சீராகும். அலுவலகத்தில் இருந்த மறைமுக எதிரிகள் இடம் மாறுவர். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகி உங்கள் முயற்சிகளில் போராடி வெற்றி அடைவீர்கள். நேற்றைய பிரச்சினை ஒன்று என்று முடிவுக்கு வரும் .நீங்கள் எதிர்பார்த்த விஷயம் ஒன்று பூர்த்தியாகும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்று அவர்கள் சொத்து விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மையை அடைவீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். உங்கள் முயற்சி முன்னேற்றம் தரும் மற்றவர்களால் முடியாத ஒரு செயலை செய்து முடித்து காட்டுவீர்கள் . முயற்சிகள் வெற்றி அடையும் நாள்.
மகரம்
மகர ராசி நேயர்களுக்கு இன்று அவர்கள் வழக்கில் வெற்றி உண்டாகும் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை முடிவுக்கு வரும். மற்றவர்கள் வார்த்தைகளை கேட்டு மனதை அலைபாய விடவேண்டாம். இன்றைய நாளில் செய்யும் செயலில் கூடுதல் கவனம் தேவை
கும்பம்
கும்ப ராசி நேயர்களுக்கு இன்று வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர்கள். நினைத்ததை அடையும் நாள்.மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த முயற்சி முழுமை பெறும். உடல் ஆரோக்கியத்தில் சங்கடம் ஏற்படலாம். போட்டியாளர்களால் நெருக்கடிகள் சந்திப்பீர்கள்
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்று மனதில் இருந்த சங்கடம் விலகி தெளிவுடன் செயல்பட்டு நினைப்பதை சாதிக்கும் நாள் .மனதில் நீண்ட நாள் இருந்த குழப்பம் விலகும். உத்தியோகத்தில் உண்டான நெருக்கடிகள் நீங்கும் .இன்று மேற்கொள்ளும் முயற்சி வெற்றிகரமாக அமையும்