வீட்டு மனை பிரச்சனைகள் தீர நாம் செய்ய வேண்டியவை
அன்றாட வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கின்றோம். அந்த பிரச்சனைக்கு இடையில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஒரு முதல் படி எடுத்து வைத்தால் அதில் ஏதாவது ஒரு பிரச்சனைகள் வரும்.
அதிலும் ஒருவர் வாழ்க்கையில் மிகப்பெரிய கனவாக நிலம் வாங்கி சொந்த வீடு கட்டி அதில் குடி கொள்வதாகத்தான் இருக்கும், அப்படி அதற்கு சில முயற்சிகள் எடுக்கும் பொழுது அதில் நிறைய தடங்கல்கள் வரும்.
சில தடங்கல்கள் நம் வாழ்க்கையில் நிரந்தரமாகும் பொழுது கவலைகளும் கூடவே நிரந்தரமாகி விடுகிறது.
அப்பொழுது அந்த கவலையை தீர்ப்பதற்கு நமக்கு கை கொடுப்பது ஆன்மீகமும் இறைவழிபாடாகமட்டும் தான் இருக்கமுடியும்
எதனால் தடங்கல்கள்மற்றும் தீராத கவலைகள் நம்மை வருடுகிறது என்ற குழப்பத்தில் இருக்கும்பொழுது வாழ்க்கையில் நாம் திண்டாடும் பொழுது வணங்க வேண்டிய கடவுள் அஷ்டபுஜ பெருமாள்.
இப்பொழுது நாம் அஷ்டபுஜ பெருமாளின் சிறப்புகளையும் வழிபாட்டின் பலன்களையும் பற்றியும் பார்ப்போம்.